mercredi 13 janvier 2010

இலங்கை தேர்தல்: தமிழ் அரசியல்வாதிகள் போர் முழக்கக்காரர்களின் பின்னால் அணி திரள்கின்றனர்

By Subash Somachandran , 11 January 2010

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அரசியல் ஊதுகுழலாக செயல்பட்டு வந்த கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) ஜனவரி 26-ல் நாட்டின் ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கிறது. இது அதன் சொந்த அரசியலை மோசமான முறையில் குற்றம்சாட்டுவதற்கு ஒப்பானது.

ஜூலை 2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் மீண்டும் தொடங்கப்பட்டு கடந்த மே மாதத்தில் LTTE யின் தோல்வியில் முடிவடைந்த உள்நாட்டுப்போரை ஈவிரக்கமற்றமுறையில் நடத்தியதற்கு நாட்டின் உயர்ந்த ஜெனரலாக இருந்த பொன்சேகா பொறுப்பாளியாவார். எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) ஆகியவற்றின் - ''பொதுவேட்பாளரான'' பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க அந்த கட்சியின் பெரும்பான்மையினர் தீர்மானித்திருப்பதாக TNA தலைவர் ஆர். சம்மந்தன் கடந்தவாரம் அறிவித்தார். ஊடகச்செய்திகளின்படி முரண்பாடுள்ள TNA பாராளுமன்ற உறுப்பினர்களின் பலர் இராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கின்றனர்.

குற்றவியல் போரை நடத்திய இரண்டுபேரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் இப்போது TNA பிளவுண்டுள்ளது. இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா இரண்டுபேருமே போர்குற்றங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை மிகப்பெருமளவில் துஷ்பிரயோகம் செய்ததற்கும் பொறுப்பாளிகள் ஆவார். ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின்படி 7,000க்கும் அதிகமான மக்கள் போரின் கடைசிமாதங்களில் LTTE ஐ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். தமிழர்கள் என்ற சாதாரண அடிப்படையிலும், லிஜிஜிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர் என்பதற்காகவும் சுமார் 280,000 போர் அகதிகளை தடுப்புமுகாம்களில் வைத்திருப்பதை ஜனாதிபதியும் அவரது ஜெனரலும் முன்னின்று செய்தார்கள்.

பொன்சேகாவிற்கு ஆதரவை நியாயப்படுத்தும் அதன் இரண்டுபக்க அறிக்கையில், போர் பற்றியோ அல்லது LTTE க்கு அது முன்பு அளித்த ஆதரவுபற்றியோ நேரடிக்குறிப்பு எதையும் TNA செய்யவில்லை. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான - ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ் மற்றும் கே.சிவனேசன்- ஆகிய மூவரும் கொலைசெய்யப்பட்டது பற்றி அது குறிப்பிட்டது. ஆனால் பொன்சேகாவும், இராஜபக்ஷவும் பொறுப்பாளிகளாக இருக்கும் இராணுவத்தின் உடந்தையுடன் செயல்பட்டுவந்த கொலைகார படைகளினால் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை குறிப்பிடவில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அவ்வாறான பாணியில் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது ''காணாமல் போனார்கள்''.
தமிழ்மக்களுக்கு ''உடனடியாக அக்கறையுள்ள விஷயங்கள்'', குறிப்பாக ''ஒரு நீடித்திருக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான'' தேவை என்று அவர் விவரித்தனவற்றின் மீது TNA தலைவர் சம்மந்தன் குவிமையப்படுத்தினார். ''அரசியல் தீர்வு'' என்பதன் மூலமாக TNA அர்த்தப்படுத்துவது என்னவென்றால் தமிழ் மேல்தட்டினரின் தேவையை பூர்த்திசெய்யக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை கொழும்பு அரசியல் நிறுவனத்துடன் ஏற்படுத்துவது ஆகும். அது 26 வருட போரினால் தமது வாழ்க்கைகளின் வேர்கள் அறுக்கப்பட்ட தமிழ்மக்களின் உடனடியான சமூகத்தேவைகளுக்கு, அல்லது முதன்முதலாக மோதலுக்கு வழிவகுத்த உத்தியோகப்பூர்வமாக பலமாக நிலைநாட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்கொள்ளும் சம்பந்தமாக எதையும் கொண்டிருக்கவில்லை.

சில TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதானமான இரண்டு வேட்பாளர்களில் யாருக்குமே ஆதரவளிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் ''பொன்சேகாவிற்கு ஓட்டு அளிப்பதன் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள வகையில் இராஜபக்ஷவை தோற்கடிக்கமுடியும்'' என்று பெரும்பான்மையினர் தீர்மானித்திருப்பதாகவும் சம்பந்தன் பாதுகாப்பான முறையில் விளக்கினார். அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அவர் அரசியல் தீர்வுக்கு எந்த முன்னேற்றத்தையும் காட்டாத இராஜபக்ஷவிற்கு எதிராக பொன்சேகாவை ''குறைந்த தீமையாக'' காட்ட முயற்சித்தார். கைப்பற்றப்பட்ட LTTE யின் பிரதேசத்தில் சிங்கள குறியேற்றங்களை செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் விமர்சித்தார். அந்த நடவடிக்கையானது வறிய சிங்கள மற்றும் தமிழ் விவசாயிகளை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி வகுப்புவாத பதட்டங்களை மட்டும்தான் அதிகரிக்கச்செய்யும்.

மறுபக்கத்தில், பொன்சேகா ''நிலவும் நிலைமையை புரிந்துகொள்வதுடன்'', ''சகஜ நிலைமையை மீட்பதற்கும், நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் ஒரு அரசியல் தீர்வின் தேவையை ஏற்றுக்கொண்டுள்ளார்'' என்கிறார் சம்பந்தன். தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் முயற்சியில் கடந்தவாரம் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உயர் பாதுகாப்பு வலையங்களை மட்டுப்படுத்த, பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர மற்றும் தமிழ் மக்களை மறுபடி குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்.
இப்படியான வாக்குறுதிகள், பயணக் கட்டுப்பாடுகளை மற்றும் ஊரடங்கு சட்டங்களை தளர்த்துவது உட்பட தமிழ் சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் இராஜபக்ஷவின் முயற்சிகள் நம்பத்தகுந்தவையாக இல்லாதிருப்பதைப் போலவே இருக்கின்றன. தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் தறுவாயில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் ''சுதந்திரமாக'' வெளியேறலாம் என்று ஜனாதிபதி அறிவித்தார். தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு சிறிய உதவிகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ்தான் வைக்கப்பட்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. மேலும் சுமார் 100,000 மக்கள் வளங்கள் இல்லாமையினாலும் திரும்பி செல்வதற்கு இடம் இல்லாமையினாலும் முகாம்களிலேயே இன்னும் இருக்கின்றனர்.

இராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது பொன்சேகா ''குறைந்த தீமையை'' பிரதிநிதிப்படுத்துவதாக கூறுவது மோசடித்தனமாகும். ஜெனரல், அவரது ஈவிரக்கமின்மைக்கும் வகுப்புவாத கண்ணோட்டங்களுக்கும் பிரபல்யமானவர். அவர் 2008-ல் ஒரு கனடா பத்திரிகைக்கு கூறியதாவது: ''இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று நான் பலமாக நம்புகிறேன், ஆனால் அங்கே சிறுபான்மை சமூகங்கள் உள்ளன, அவர்களை நமது மக்கள் போல் நாம் நடத்துகிறோம்... அவர்கள் இந்த நாட்டில் நம்முடன் வாழலாம். ஆனால் அவர்கள், ஒரு சிறும்பான்மையாக இருக்கிறார்கள் என்ற சாக்குப்போக்கில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை கோர முயற்சி செய்யக்கூடாது.'' அவர் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக இப்போது கூறுகிறார்.

மிகவும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், தேர்தல் முடிந்த உடனேயே - பொன்சேகா அல்லது ராஜபக்ஷ யார் வென்றாலும் சரி - உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரங்களின் மீது ஒரு மிகப்பெரும் அளவிலான தாக்குதல் தொடுக்கப்படும் என்ற உண்மையை மூடிமறைப்பதற்காக அனைத்து வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல்கள், மற்றும் பொது செலவுகளில் ஆழமான வெட்டுகள் உட்பட தொலைவீச்சு கொண்ட மறுசீரமைப்பு திட்டங்கள், நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. இந்த தொழிலாள வர்க்க - விரோத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்காக அரசு இயந்திரத்தை பிரயோகிக்கும் திறனை பொன்சேகா அதிகமாக கொண்டிருப்பதாக ஆளும் தட்டின் பிரிவினர் கருதுவதனால், அவருக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

பொன்சேகாவிற்கு பின்னால் TNA அணிதிரள்வது அல்லது அதன் சிறுபான்மையைப் பொறுத்தவரையில் இராஜபக்ஷவிற்கு பின்னால் அணிதிரள்வது என்பது அதன் சொந்த அரசியலின் அல்லது LTTE யின் அரசியலின் மரணமுடிவை கோடிட்டுக்காட்டுகிறது. தீவின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் ஒரு தனியான முதலாளித்துவ அரசை அமைப்பதற்கான LTTE யின் கோரிக்கை, எப்போதும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்ததேயன்றி தமிழ் மக்களுடையதை அல்ல. அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்களை அடுத்து உக்கிரம் அடைந்த சர்வதேச அழுத்தத்தின் கீழ் தனி ஈழத்திற்கான கோரிக்கையை கைவிட்ட LTTE, 2002ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நுழைந்தது.
பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புக்கள் திறக்கப்படுவதாக கண்டு அதை சாதகமாக்கிக் கொள்வதற்காக பல்வேறு முதலாளித்துவ தமிழ் கட்சிகள் 2001ல் ஒன்று சேர்ந்து TNA வை உருவாக்கினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்பட்டவை வெற்றி கண்டிருக்குமாயின், முக்கியமான அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும். தென் ஆசியாவில் முதலீட்டிற்கான ஒரு மையமாக தீவை மாற்றுவதற்கு கொழும்பு அரசாங்கம் முயற்சிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும், தொழில் வியாபாரிகளும், ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தரகர்களாகவும், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் ஆட்களாகவும் இருந்திருப்பார்கள். வேறுவார்த்தைகளில் கூறுவதாயின், சிங்கள மற்றும் தமிழ் மேல்தட்டினர் தொழிலாள வர்க்கத்தை தாம் பரஸ்பரமாக சுரண்டுவதற்கான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டிற்காக காத்திருந்தனர்.

1948 சுதந்திரத்திலிருந்து கொழும்பு அரசியல்வாதிகளின் மூட்டை மூட்டையான இருப்பாக இருந்துவந்த வகுப்புவாத அரசியலுக்குள் சமாதான நிகழ்வுப்போக்கு என்று அழைக்கப்பட்டவை மூழ்கடிக்கப்பட்டன. மறுபோரை நோக்கிய சறுக்கலுக்கான தெளிவான அறிகுறி இருக்கும் போது, 2005 ஜனாதிபதி தேர்தல்களை பகிஷ்கரிக்கும்படி LTTE ஆணையிட்டது. அதன்மூலமாக ஒரு சிறிய இடைவெளியில் இராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு உதவியது. இராஜபக்ஷ மேலும் மேலும் அப்பட்டமாக போருக்கு தயார் செய்த போது சமாதான வார்த்தைகளை மீண்டும் தொடங்கும்படி ''சர்வதேச சமூகத்திற்கு'' LTTE விண்ணப்பித்தது, ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் இந்தியா அனைத்துமே இராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தன.

இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எந்த ஒரு அரசியல் விண்ணப்பமும் செய்வதற்கான அதன் உள்ளார்ந்த (organic) திறனின்மையிலிருந்து LTTE யின் இராணுவத்தோல்வி ஊற்றெடுத்தது. தமிழ் மக்கள் மத்தியில் அதற்குள்ள ஆதரவு வீழ்ச்சி கண்டபோது அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி அது நசுக்கியது. நிச்சயமாக LTTE யின் வீழ்ச்சி பற்றி TNA எந்த ஆய்வும் செய்யவில்லை. ஆனால், திரும்பவும் கொழும்பு அரசியல் நிறுவனத்துடன் தன்னை ஒன்றிணைத்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. ஒரு தனி அரசு அல்லது அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் என்பதைவிட அதிகமாக தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை ஒரு ''அரசியல் தீர்வின்'' மூலமாக பாதுகாப்பதற்காக இராஜபக்ஷவுடனும், அரசாங்கத்துடனும் TNA தலைவர்கள் குலாவல்களில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான TNA தலைவர்கள் பொன்சேகா அல்லது இராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கையில் ஒரு அதிருப்தியடைந்த TNA பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பழைய தீவிரவாதிகளான நவ சம சமாஜ கட்சியின் (NSSP) ஆதரவுடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது வேலைத்திட்டமானது, TNA இலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. ஒரு கூட்டாட்சி கட்டமைப்பினுள் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தும் ஒரு அரசியல் தீர்வு தான். இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா மீது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் உக்கிரமான விரோதத்தை சாதகமாக்கிக்கொள்ள சிவாஜிலிங்கம் இலகுவாக முயற்சிக்கிறார். அதன்மூலம், யார் வெற்றிக்கண்டாலும் அடுத்து வரவிருக்கும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை பேரத்தில் நன்றாக ஈடுபடமுடியும் என்பதற்காகும்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக இந்த தேர்தலில் போராடுவது சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே ஆகும். சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளரான விஜே டயஸ் பின் வருமாறு எச்சரித்துள்ளார், அதாவது போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் சிறும்பான்மையினரை ஒடுக்குதல் மூலமாக அடையப்படும் தற்காலிகமான அமைதியானது எதிர்கால வகுப்புவாத பதட்டத்திற்கும், மோதலுக்கும்தான் வழிவகுக்கும், அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்கள் போரை தொடங்குவதற்கும், மற்றும் தொடர்வதற்கும் பொறுப்பாளிகளாக இருக்கும் அதே சமயம், LTTE யின் வகுப்புவாத அரசியலும் மற்றும் ்வழிமுறைகளும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு மட்டும்தான் உதவிசெய்துள்ளன.

26 வருட போர் முழுமையாக இலங்கை முதலாளித்துவத்தின் மீது குற்றம் சுமத்துகிறது. அது உழைக்கும் மக்களுக்கு அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு உள்ளார்ந்த ரீதியில் திறனற்றது. தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்கும்படியும் தமது பொதுவான வர்க்க நலன்களுக்காக போராடுவதற்காக ஐக்கியப்படும்படியும், தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான பரந்த போராட்டத்தின் பகுதியாக அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்ய திறனுள்ள சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டும்தான். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்துவது, பாரபட்சமான மற்றும் ஒடுக்குமுறையான சட்டம் மற்றும் நெறிமுறைகளை ஒழிப்பது, போர் வலையங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தமது சிதைக்கப்பட்ட வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக கோடிக்காணக்கான ரூபாய்களை ஒதுக்குவது போன்றவற்றை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

நமது வேட்பாளரான விஜே டயஸுக்கு ஆதரவளிக்கும் படியும் மற்றும் கட்சியின் பிரச்சார இயக்கங்களில் செயலூக்கத்துடன் பங்கெடுக்கும் படியும் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

நெருக்கடியில் ஐரோப்பா

By Peter Schwarz, 11 January 2010

கடந்ததசாப்தத்தின்ஆரம்பத்தில், மார்ச்2000 த்தில், ஐரோப்பியஒன்றியநாடுகளின்தலைவர்கள்லிஸ்பன்மூலோபாயத்தைஅறிவித்தனர். 2010க்குள்"ஐரோப்பாவைமிகப்போட்டித்தன்மை, இயக்கச்செறிவுநிறைந்த, அறிவுத்தளத்தைக்கொண்டபொருளாதாரஅலகாகஉலகில்மாற்றவேண்டும், நீடித்தபொருளாதாரவளர்ச்சிமற்றும்கூடுதலானவேலைகள்மற்றும்சிறந்தசமூகஇணக்கம்அடையப்படவேண்டும்" என்றுஅதன்நோக்கம்இருந்தது. இது"முழுவேலைநிலைமைக்கானசூழ்நிலையைஉருவாக்கும், ஐரோப்பியஒன்றியத்தில்வட்டாரகூட்டிணைவுத்திறனைவலிமைப்படுத்தும்" என்றுகூறப்பட்டது.

21ம்நூற்றாண்டின்இரண்டாம்தசாப்தம்ஆரம்பிக்கையில்,போர்த்துகல்தலைநகரில்விளக்கிக்கூறப்பட்டஅபிலாசைகள்ஆவியாகிவிட்டன. முழுவேலைஎன்பதற்குப்பதிலாகஐரோப்பாவெகுஜனவேலையின்மையினால்பீடிக்கப்பட்டுள்ளது; பொருளாதாரவளர்ச்சிக்குமாறாகதேக்கம்ஏற்பட்டுள்ளது;கூட்டிணைவுத்திறனுக்குபதிலாகஉடன்பாடின்மைஏற்பட்டுள்ளது. லிஸ்பனின்உயர்திட்டங்களுக்குஅஸ்திவாரமாகஇருந்தபொதுநாணயம்கூடகடும்நெருக்கடியின்ஆபத்தில்உள்ளது.
லிஸ்பன்மூலோபாயம்,ஐரோப்பியஒன்றியவிரிவாக்கம்ஆழ்ந்தஒருங்கிணைப்புமூலம்ஐரோப்பாஅமெரிக்காவிற்குஇணையாகவந்துவிடும், ஏன்ஒருபெரியசக்திஎன்னும்முறையில்அதைக்கடக்கவும்கூடும்என்றபரந்தபிரமைகளின்வெளிப்பாடுதான். இதுமுந்தையகாலத்தில்இருந்தசமூகபதட்டங்கள், அரசியல், இராணுவபூசல்கள்இல்லாதஒருஒன்றுபட்டஐரோப்பியபொருளாதாரசக்தியின்விளைவாகஏற்படும்என்றுகருதப்பட்டது.
இந்தப்பிரமைகள்அப்பொழுதுஜேர்மனியவெளியுறவுமந்திரியாகJoschka Fischer (பசுமைக்கட்சி) மே2000 த்தில்பேர்லின்Humboldt University –ல்நிகழ்த்தியஉரையில்தெளிவானவெளிப்பாட்டைக்கண்டது.

ஐரோப்பியஒன்றியம்தளர்ந்தநாடுகளின்கூட்டுஎன்பதில்இருந்துஒருகூட்டமைப்பாகமாறவேண்டும்என்றுதிவீsலீமீக்ஷீஅழைப்புவிடுத்தார்.
"தங்கள்முக்கியநலன்களைஒருங்கிணைத்து, தேசியஇறைமைஉரிமைகளைநாட்டிற்கும்அப்பாற்பட்டஐரோப்பியநிறுவனங்களுக்குமாற்றுவதின்மூலம்" ஐரோப்பியநாடுகள்1945க்குமுன்னர், கண்டத்தைசிதறடித்ததேசியபூசல்களைநிராகரிக்கின்றனஎன்றுஅடையாளம்காட்டும்என்றார்பிஷ்ஷர். இவ்விதத்தில்தான்ஐரோப்பா"உலகப்பொருளாதார, அரசியல்போட்டியில்அதன்உரியபங்கைக்கொள்ளமுடியும்" என்றார்.

அப்பொழுதுமுதல்ஐரோப்பாஒருமுதலாளித்துவமுறையில்இணக்கமாகஅமைக்கப்படும்என்றபிஷ்ஷரின்கருத்துபகற்கனவாயிற்று. பாரிஸ், இன்னும்குறிப்பாகலண்டனில், அவருடையதிட்டம்ஐரோப்பாவைபேர்லினின்ஆணைக்குஉட்படுத்தும்வகையில்உள்ளதுஎன்றுவிளக்கம்காணப்பட்டது. ஐரோப்பியஒன்றியம்கிழக்குஐரோப்பாவைஇணைத்துபெரிதுபடுத்திக்கொண்டதும்இரட்டைகூர்மைஉடையகத்தியாகபோயிற்று. உள்சந்தைவிரிவாக்கத்தைகொண்டுவந்ததுமட்டும்இல்லாமல், அதுஅரசியல்பூசல், உறுதியற்றதன்மைஆகியவற்றையும்கொண்டுவந்தது.

2003ல்அமெரிக்கஈராக்கைதாக்கியதன்மூலம்ஐரோப்பாவைபிரித்தது. பிரிட்டிஷ்மற்றும்போலந்துஅரசாங்கங்கள்போரைஆதரித்தபோது, ஜேர்மனியும், பிரெஞ்சும்அதைஎதிர்த்தன. அமெரிக்கநிர்வாகம்பூசலைப்பயன்படுத்தி"பழைய", "புதிய" ஐரோப்பாக்களுக்குஇடையேபிளவைஏற்படுத்தியது.

பிஷ்ஷரின் கருத்தாய்வில் எஞ்சி நின்ற ஐரோப்பிய அரசியலமைப்பு, 2005ல் பிரெஞ்சு, டச்சு வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்டது; அவர்கள் அதை ஐரோப்பிய மக்களை ஐரோப்பாவின் மிகச் சக்திவாய்ந்த நிதிய, பொருளாதார நலன்களுக்கு தாழ்த்தும் முயற்சி என்று சரியாக விளக்கம் கண்டனர். பல ஆண்டுகள் தூதரக மற்றும் அரசியல் இழுபறிக்கு பின்னர், ஐரோப்பிய அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பு லிஸ்பன் ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்குள் பேர்லினும் பாரிஸும் பெரிதும் அக்கறை இழந்துவிட்டன. இது இரு முக்கிய பதவிகளுக்கான குழுத் தலைவர் மற்றும் ஐரோப்பிய வெளியுறவு மந்திரி பதவிகளைப் பொறுத்தவரையில் இரண்டாம் தர நபர்களை அதிகாரமின்றி நியமித்ததின் மூலம் நிரூபணம் ஆயிற்று.

நிக்கோலோ சார்க்கோசி மற்றும் அங்கேலா மேர்க்கெல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து பிரான்ஸும் ஜேர்மனியும் இன்னும் கூடுதலான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கு மாறின; அமெரிக்காவிடம் வலுவான குறிப்பைக் காட்டின. 2005ல் ஜேர்மனிய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி) முன்கூட்டியே அதிகாரத்தில் இருந்து நீங்கிவிட்டார்; ஏனெனில் மற்றவற்றுடன் அவருடைய ரஷ்ய சார்பு வெளியுறவுக் கொள்கை, பெருகிய முறையில் அவர் தனிமைப்படுத்தப்பட காரணமாயிற்று. ஆனால் வாஷிங்டன் ஐரோப்பிய நலன்களில் பெருகிய முறையில் கவனம் காட்டும் என்ற நம்பிக்கை நிறைவேறாமல் போயிற்று; புஷ்ஷில் இருந்து ஒபாமா ஜனாதிபதி பதவியை பெற்ற பின்னும் இந்நிலைதான் தொடர்ந்தது.

சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி இப்பொழுது ஐரோப்பிய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் தீர்க்கப்படாமல் இருந்த அனைத்து முரண்பாடுகளையும் பகிரங்கமாக கொண்டுவந்துவிட்டது. உலக அரங்கில் பெருகிய முறையில் மேலாதிக்கம் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் போட்டியில் ஐரோப்பா விளிம்பிற்கு தள்ளப்பட்டு சிதறும் தறுவாயில் உள்ளது.

ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் நேட்டோ நட்பு நாடுகளை முன்கூட்டியே கலந்து ஆலோசிக்காமல் வாஷிங்டன் ஆப்கானிய போரை மகத்தான முறையில் விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்தது பற்றி கசப்பு உணர்வு கொண்டுள்ளன. ஒருபுறம், அவை மூலோபாயம் நிறைந்த பகுதியை அமெரிக்காவின் முழுச் செல்வாக்கின்கீழ் விட்டுவிட விரும்பவில்லை; மறுபுறமோ, போர் இன்னும் விரிவானால், தாங்கள் அமெரிக்காவின் கையாட்கள் போல் ஆக நேரிடும் என்று அஞ்சுகின்றன. கோப்பன்ஹேகன் தட்பவெப்பம் மாறுபடல் உச்சிமாநாட்டின் தோல்வி, அமெரிக்க சீன அரசாங்கங்களின் செயல் என்று ஐரோப்பா கூறியுள்ளது சீற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் இயல்பான வலுவற்ற தன்மையையும் பொருளாதார நெருக்கடி அப்பட்டமாக காட்டியுள்ளது. கிரேக்கம், அயர்லாந்து, இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பெரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் யூரோவின் முதுகை முறிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. இதுவரை பொது நாணயமுறை பெரும் மதிப்புக் குறைப்பையும் அதையொட்டி பணவீக்கத்தின் ஏற்றத்தையும் தடுத்துள்ளது; ஆனால் யூரோவின் உயர்மதிப்பு, ஏறும் வட்டி விகிதத்துடன் சேர்ந்து யூரோப் பகுதி நாடுகளை தடையற்ற சந்தை அடிப்படையில் நெருக்கடியைக் கடக்க இயலாமல் செய்துள்ளன. இதற்கு விடையிறுக்கும் வகையில் பிரஸ்ஸல்ஸ் அரசாங்க செலவினங்கள் குறிப்பாக சமூக நல செலவுகளில் கடுமையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
யூரோப்பகுதியில் உறுப்பினராக இல்லாத பிரிட்டன் பெருகிய முறையில் ஐரோப்பாவின் நோயாளி நாடாக மாறிவருகிறது. இதன் பொருளாதாரம் மிக அதிகம் நிதியத் துறையை நம்பியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இங்கிலாந்தில் உற்பத்திப் பிரிவு வேலைகள் 30 சதவிகிதம் சரிந்துள்ளன. இதே காலத்தின் ஜேர்மனியிலும் பிரான்சிலும் சரிவு மிகக் குறைவாக, முறையே 5, 10 சதவிகிதமாக உள்ளன. நிதியத் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மிகப் பரந்த அளவில் கடன் வாங்கியுள்ளது. பவுண்டின் மதிப்பும் இதையொட்டி வீழ்ந்துள்ளது. மற்றொரு வங்கி நெருக்கடி என்பது, நாட்டுக் கடனில் தவணைகளில் தாமதத்தை இங்கிலாந்து காட்டுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஜேர்மனியை பொறுத்தவரையிலும், சற்று குறைந்த தன்மையில் பிரான்ஸைப் பொறுத்தவரையிலும், அவற்றின் ஒப்புமையில் வலிமையுடைய பொருளாதாரமே தலைவலியைக் கொடுத்துள்ளது, ஜேர்மனியில் தொழில்துறை உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் என்ற முறையில் அமெரிக்காவில் இருப்பதைப் போல் இரு மடங்கு ஆகும். ஜேர்மனிய தொழில்துறை உற்பத்தியின் ஒப்புமையிலான வலிமை ஜேர்மனிய ஏற்றுமதிகளில் உள்ள மகத்தான ஏற்றத்துடன் பிணைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஜேர்மனியின் ஏற்றுமதிக்கான உற்பத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20ல் இருந்து 47 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதிகள்கூட அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவிகிதம்தான் உள்ளது.

தொழில்துறை ஏற்றுமதியில் அதிக நம்பிக்கை வைத்துள்ளது ஜேர்மனியை குறிப்பாக சர்வதேச பொருளாதார நெருக்கடியின் பாதிப்பால் வலிமையற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு, பொருளாதார உற்பத்தி 5.3 சதவிகிதம் குறைந்தது; பொறியியல் துறை உற்பத்தி இப்பொழுது அதன் திறனில் 70 சதவிகிதமாகத்தான் உள்ளது. வல்லுனர்களின் கருத்துப்படி முன்னேற்றத்திற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஆகும்.

அமெரிக்க, சீன நாடுகளின் தன்மையினால் ஜேர்மனிய ஏற்றுமதி தொழில் இப்பொழுது மகத்தான அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா குறைந்த டாலர் மதிப்பு, அதன் குறைந்த ஊதியத் தரங்களை பயன்படுத்தி, அமெரிக்க கார்த் தொழிலை மிருகத்தனமான முறையில் மறு கட்டமைத்து ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு எதிராக போட்டி நலனை அடைய முற்பட்டுள்ளது. இவ்விதத்தில் அடையாளமாக இருப்பது, உற்பத்தியில் பகுதி மாற்றம் மெர்சிடெஸ் S- வகுப்பு ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதில் இருந்து தெரியவரும். தன்னுடைய பங்கிற்கு சீனா இப்பொழுது ஒருகாலத்தில் ஜேர்மனியின் சிறப்பு அம்சமாக இருந்த சந்தைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது; இதற்குக் காரணம் அவற்றின் உயர்ந்த தரங்கள் ஆகும்.

ஐரோப்பிய, ஜேர்மனிய உயரடுக்குகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவை செய்தது போல் இந்தப் பெருகிய பிரச்சினைகள், முரண்பாடுகளை எதிர்கொள்ளுகின்றன. அதாவது பெருகிய இராணுவவாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக, அரசியல் தாக்குதல்களை நடத்துதல் ஆகும் .

பல அரசாங்கங்களும் முடங்கியிருப்பது போல் தோன்றுகிறது; ஏனெனில் பெருகிய வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் மற்றும் உட்பூசல்கள் உள்ளன. பேர்லினில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக-சுதந்திர ஜனநாயக அரசாங்கம் நவம்பர் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து உட்பூசல்களில் ஆழ்ந்துள்ளது. அதிபர் மேர்க்கெல் அனைத்துப்புறங்களில் இருந்தும் உறுதியற்ற தன்மை, வலுவற்ற தலைமை என்ற தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் திரைக்குப் பின்னால், புதிய ஆட்சிக் கருவிகளுக்கான ஆழ்ந்த தேடுதல் நடைபெறுகிறது; அது பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் விளைவுகளை எளிமைப்படுத்தும்; ஏனெனில் சமூக சமரச வழிவகைகள் பெரிதும் தீர்ந்துவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் ஜனநாயக உரிமைகள் தான தாக்குதல் தீவிரப்படுத்தப்படுகிறது; பயங்கரவாதத்தாக்குதல்கள் பற்றி அச்சம் வளர்க்கப்படுகிறது, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் தீவிரமாகின்றன. இத்தகைய பிற்போக்கு முயற்சிகளில் முன்னணியில் இருப்பது ஜேர்மனிய சமூக ஜனநாயக வாதிகள் Thilo Sarrazin, முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அரசியல் வாதியும் தற்போதைய பிரெஞ்சு குடியேற்றப் பிரிவு மந்திரி எரிக் பெசோனும் ஆவர். மசூதி கோபுரம் கட்டுவதற்கு எதிராக சுவிஸ் வாக்கெடுப்பு ஆதரவு கொடுத்தது இந்த வட்டங்களால் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு பரிவுணர்வுடன் காணப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் வர்க்கப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்பி, வலதுசாரி மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளை திரட்டி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்தில் செயல்படுத்த இருப்பதை பிரதிபலிக்கின்றன.

உழைக்கும் மக்கள், முதலாளித்துவ வாதிகளின் ஐரோப்பிய திட்டங்களின் தோல்வியில் இருந்து தங்கள் முடிவுகளை பற்றி எடுக்க வேண்டும். ஐரோப்பிய தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தங்கள் சமூக, அரசியல் நலன்களைக் காக்க முன்வர வேண்டும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரகள் என்ற பதாகையின்கீழ் ஒரு சோசலிச ஐரோப்பாவை நிறுவ அவர்கள் போராட வேண்டும்.

dimanche 10 janvier 2010

சோசலிச சமத்துவக் கட்சி

சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிசப் புரட்சிக்காக போராடுகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாகும். சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி தெற்காசியாவிலும் மற்றும் முழு பூகோளத்திலும் சோசலிசக் குடியரசை அமைப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்காக போராடுகின்றது.

சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கான போராட்டமானது, தம்மைச் சூழ ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும். அதேபோது அனைவரருக்கும் சமாதானம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தையும் உத்தரவாதம் செய்ய முடியும். இன்று 70,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், இலட்சக்கணக்கானோர் தடுப்பு முகாங்களில் தள்ளப்பட்டும், ஏதுமில்லாதவர்களாக்கப்பட்டதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள் துன்பியலான முறையில் சரியென வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அனைத்து வகையான முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் அதன் ஏஜன்டுகளிடம் இருந்தும் உழைக்கும் மக்களின் சுயாதீனமான அணிதிரட்டலுக்காக போராடுகின்றது.

உள்நாட்டு யுத்தத்தை இடைவிடாது எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

இந்த புரட்சிகர முன்னோக்கை முன்னெடுத்துச் செல்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக விஜே டயஸ் போட்டியிடுகிறார். எமது பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறும் உங்களது வாக்குகளையும் ஆதரவையும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த முன்னோக்கை உங்களது குடும்பத்தவர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்துமாறும் அழைப்புவிடுக்கின்றோம்.

உலக மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதாரம், வரலாறு, விஞ்ஞானம், கலை மேலும் பல செய்திகளையும் ஆய்வுகளையும் தமிழ் உட்பட 13 மொழிகளில் வாசிக்க உலக சோசலிச வலைத் தளத்தை http://www.wsws.org/ ஐ பார்வையிடுங்கள்.

அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமிடையிலான போட்டி தீவிரமாகிறது

By John Chan
9 January 2010

கடந்த ஆண்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவும் அதனுடைய போட்டி எழுச்சி பெற்றுவருகின்ற நாடான சீனாவும் ஒன்றாகச் சேர்ந்து உலகப் பிரச்சினைகளையும் குறிப்பாக முதலாளித்துவத்தை அழித்துக் கொண்டிருக்கும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியையும் தீர்த்துவிடும் என்று வெகு அண்மையில் தோன்றிய "G2" என்று பேசுவது ஒரு புதுப்பாணியாக இருந்தது.

ஒபாமா நிர்வாகம் தொடர்ச்சியான சினமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து சீனாவிடம் கடினப்போக்கிற்கான அடையாளத்தைக் காட்டியுள்ளமையானது இந்த ஆண்டு அத்தகைய போலித் தன்மைகள் விரைவில் கரைந்து போகச் செய்தன; இதில் தைவானுக்கு நவீன ஆயுதங்கள் விற்பனை மற்றும் தலாய் லாமாவுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்கள், குறிப்பாக எஃகு குழாய்கள், எஃகுத் தகடுகள் மற்றும் டயர்கள் உட்பட பலவற்றின்மீது, அதிக பொருளாதார பாதுகாப்பு வரிகளை அமெரிக்க சுமத்தியதற்கு பின் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் வெளிவந்துள்ளன. தைவானுக்கு ஆயுத விற்பனை பற்றி பெய்ஜிங் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அதே போல் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தாலும் உறுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ஒபாமா ஏற்பாடு செய்துள்ள அணுவாயுத பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அமெரிக்காவுடன் இருதரப்பு இராணுவ உரையாடலை முழுமை செய்ய மாட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஈரானுக்கு எதிரான அதன் அணுசக்தி திட்டங்களுக்காக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை சுமத்த இருக்கும் நிலையில், பெய்ஜிங் பகிரங்கமாக அதை எதிர்த்துள்ள நிலையில், உறவுகள் இன்னும் அதிகமாக சீர்குலையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் அதனுடைய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் பெருகிய முறையில் பெய்ஜிங்கினால் தடைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற உணர்வினால் உந்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த நவம்பர் சீனாவிற்கு ஒபாமா மிக அதிகமாக எதிர்பார்த்து மேற்கொண்ட பயணம் தோல்வி அடைந்ததாகத்தான் பரவலான முறையில் கருதப்படுகிறது; டாலருக்கு எதிராக யுவான் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற அவருடைய அழைப்பும் புறக்கணிக்கப்பட்டது; மாறாக அமெரிக்கப் பத்திரங்களை (bonds) சீனா தொடர்ந்து வாங்கவேண்டுமானால் அமெரிக்கா நிதியக் கட்டப்பாட்டு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற உபதேசத்தை பெற்றார். கோபன்ஹேகனில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டில், சீனாவினால் தலைமை தாங்கப்பட்ட முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது; ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர ஒபாமா முற்பட்டபோது அம்முகாம் அவரைக் குறிப்பாகப் பொருட்படுத்தாமல் போயிற்று.

இத்தகைய பதட்டங்கள், உற்பத்தியின் பூகோளமயமாக்கலினால் முக்கிய பொருளாதார சக்திகளுக்கு இடையே திடீரென மாறும் உறவுகளில் ஆழ்ந்த மூலத்தை கொண்டுள்ளன. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், ஒரு ஆற்றல் மிக்க போட்டி நாட்டை அது எதிர்கொண்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவைப் போல் எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. ஒரு தசாப்தத்திற்குப் பின் இந்த எண்ணிக்கை நான்கு மடங்குதான் அதிகம் என்று குறைந்துவிட்டது. இந்த ஆண்டு சீனா உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை ஜப்பானைக் கடந்து பெற்றுவிடக்கூடும். 2009ல் சீனா உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தியாரும் சந்தையும் என்ற நிலையை அமெரிக்காவைக் கடந்து அடைந்தது. இரு தசாப்தங்களுக்கு முன்பு கார்த் தொழில் சீனாவில் அதிகம் மேன்மை அடைந்திருக்கவில்லை.

2008ல் வெடித்த உலக நிதிய நெருக்கடி அமெரிக்காவை ஆபத்திற்கு உட்படுத்திருக்கும் நிலையானது சீன முதலாளித்துவத்தின் எழுச்சியைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 2009ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்கள் சுருக்கம் அடைந்த நிலையில், சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 50 சதவிகிதத்திற்கும் மேலான வழங்கலைக் கொடுத்தது. கடந்த ஆண்டு சீனா ஜேர்மனியைக் கடந்து உலகின் மிக அதிக ஏற்றுமதி நாடு என்று ஆயிற்று. முக்கிய மேற்கத்தைய வங்கிகள் பிணை எடுப்புக்களுக்கு உட்பட்ட நிலை வந்தபோது, ஏழு மிகப் பெரிய ஆசியப் பொருளாதாரங்கள் தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புக்களை 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் என வைத்துள்ளன--இது உலக நாடுகள் பிற அனைத்தும் வைத்திருப்பதைவிட அதிகமாகும்.

சீனாவிற்கும் ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பிற்கும் இடையே தடையற்ற வணிக உடன்பாடு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது; ஒரே இரவில் இது உலகின் மூன்றாவது மிகப் பெரிய தடையற்ற வணிகப் பகுதியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க தடையற்ற வணிக அமைப்புகளுக்கு அடுத்தாற்போல் வந்துவிட்டது. இந்த உடன்பாட்டில் இருந்து வாஷிங்டன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல், அப்பகுதியில் இருக்கும் நாடுகளுடன் ஒரு சில இருதரப்பு உடன்பாடுகளைத்தான் கொண்டிருக்கிறது.

மூலப்பொருட்கள், எரிசக்தி மற்றும் சந்தைகளின் தேவைகள் ஆகியவற்றால் உந்துதல் பெற்றிருக்கும் சீனா தன்னுடைய பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குதல், நீண்ட கால ஒப்பந்தங்களை பெறுதல் மற்றும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை உயர்த்திக் கொள்ள உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது. 2009ல் பெருநிறுவன இணைப்புக்கள் மற்றும் எடுத்துக் கொள்ளுதல் (Mergers and acquisition) என வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 46 பில்லியன் டாலர் அதிகரித்தமையானது 2005ல் 9.6 பில்லியன் டாலராக இருந்ததைக் காட்டிலும் இது ஐந்து மடங்கு அதிகமாகும். மத்திய ஆசியாவில் இருந்து ஆபிரிக்கா மற்றும் பசிபிக் என்று உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சீனாவின் பொருளாதார விரிவாக்கமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு சவாலாக இருந்து வருவதுடன் இப்போதைய உறவுகளில் பிளவுகளை உண்டாக்குகிறது.

இதில் சற்றும் ஒளிவு மறைவில்லாதது பெருகுவது இராணுவப் போட்டி ஆகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் அமெரிக்காவின் தலைமையிலான போர்கள், பாக்கிஸ்தானில் தனது கைப்பொம்மைகள் மூலம் நடைபெறும் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகியவைகள் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் தன்னுடைய முக்கிய மூலோபாய பகுதிகளில் அதன் போட்டி நாடுகள் குறிப்பாக சீனாவை விலக்கி வைத்து மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உந்துதலில் நடைபெறுகின்றன. இன்னும் பரந்த முறையில், அமெரிக்காவானது சீனாவைச் சுற்றிவளைத்து தொடர்ந்து அமைக்கப்படும் கூட்டுக்கள் மற்றும் தளங்கள் ஆகியவற்றை ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிவற்றில் இருந்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா வரை நிறுவ முயல்கிறது. தன்னுடைய இராணுவத் திறன்களை கட்டமைக்கும் வகையில் சீனா இதை எதிர்கொண்டுள்ளது. அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கு செல்லும் கப்பல் பாதைகளில் ஆழ் கடல் கடற்படை அமைத்தலும், மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்க்க நடைமுறைக் கூட்டாளியாக ரஷ்யாவுடன் உறவையும் கொண்டுள்ளது.

டிசம்பர் 23ம் தேதி பைனான்சியல் டைம்ஸின் பொருளாதார கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் எழுதிய கட்டுரையில் அவர் சீனாவின் எழுச்சியானது அமெரிக்காவின் "பேரழிவுதரும் வகையில் ஏற்பட்டுள்ள அதிகார இழப்பு", என்னும் தொலைவிளைவுகளைத் தரக்கூடியவைகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களினாலும், உலக நிதிய நெருக்கடியினாலும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். "21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் ஆண்டுகள் ஒரு நூற்றாண்டிற்கு முன் இருந்த அதே செல்வாக்குக் குறைவான தன்மையைத்தான் காட்டுகின்றன." என்று அவர் கூறியுள்ளார்.

உலக மேலாதிக்கத்தில் பிரிட்டனின் சரிவும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போட்டி நாடுகளின் எழுச்சியும் --குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்கா என-- மூன்று தசாப்தங்கள் எழுச்சி, இரு உலகப் போர்கள், பெரு மந்த நிலை என்பவற்றிற்குதான் வழிவகுத்தது. இதன்பின் அமெரிக்கா புதிய மேலாதிக்க சக்தியாக வெளிப்பட்டது. "இப்பொழுது இன்னும் கடுமையான விதத்தில் அதிகாரம் மாறுதலில் உள்ள சூழ்நிலையைக் கொண்டிருக்கிறோம்." என்று வொல்ப் அறிவித்துள்ளார்.

சர்வதேச கூட்டுறவு தேவை என்ற பொதுக் கருத்தைத் தவிர வொல்பிடம் வேறு திட்டம் ஏதும் இல்லை. அனைத்து நாடுகளும் பெஞ்சமின் பிராங்க்ளினின் கோட்பாட்டின் மதிப்பை அறிய வேண்டும் என்று முறையிட்டுள்ள விதத்தில் சோகமாக கட்டுரையை முடித்துள்ளார். "நாம் அனைவரும் ஒன்றாகத் தூக்கிலிட்டுக் கொள்ள வேண்டும் அல்லது உறுதியாகத் தனித்தனியே தூக்கிலே தொங்குவோம்." என்பதுதான் அது. வொல்ப் முடிக்கிறார்: என்ன நடக்கும்? ஐயோ, நான் அப்படி ஆகிவிடுமோ என்று சந்தேகிக்கிறேன்."

இந்த அவநம்பிக்கைக் குரல், கூடுதலான திறனாயும் தன்மை பெற்றுள்ள முதலாளித்துவ நோக்கர்களிடையே சர்வதேசப் போட்டிகள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றன அன்றி, தணியவில்லை என இருக்கும் உணர்வு புரிந்து கொள்ளப்பட்டதைத்தான் காட்டுகிறது. முதலாம் உலகப் போருக்கு நடுவே லெனின் தன்னுடைய தொலை நோக்கு நிறைந்த "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்" என்ற துண்டுப் பிரசுரத்தில் உலக முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே நிரந்த உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியிருந்தார். ஒரு கட்டத்தில் மேற்கோள்ளப்படும் உடன்பாடு போட்டியிடும் முதலாளித்துவப் பொருளாதாரங்கங்களுக்கு இடையே வளர்ச்சி விகிதங்கள் மாறுபட்டிருப்பதால் தகர்ந்துவிடும் ஆபத்தைக் கொண்டது. சரியும் சக்திகளுக்கும் எழுச்சி காணும் போட்டி நாடுகளுக்கும் இடையே உள்ள போட்டி போரிலேயே முடிவெடுக்கப்படும்.

இன்றைய பதட்டங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு புதிய சமநிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா கொண்டிருந்த பங்கைப் போன்ற தன்மை எந்த நாட்டிற்கும் இல்லை என்பதால் தீவிரமாகின்றன. சீனா ஒரு மகத்தான பொருளாதார சக்தி, ஆனால் களிமண் போன்ற கால்களை உடையது பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் நிறைந்தது. அதன் பொருளாதாரம் மேற்கத்தைய முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆகியவற்றை நம்பியுள்ளது. சீனாவின் மிகப் பெரிய பொருளாதார "வலிமை"--அதன் மிக பிரமாண்டமான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு--தவிர்க்க முடியாமல் ஆழ்ந்த சமூக அழுத்தங்களை தோற்றுவிக்கிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலகில் இரண்டாவது இடத்தில் என வரவிருக்கும்போது 2008ல் அதன் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 3250 டாலர் என்று 104வது இடத்தில் ஈராக், ஜோர்ஜியா மற்றும் கொங்கோ குடியரசு ஆகியவற்றிற்கும் பின்னால்தான் உள்ளது. அமெரிக்காவினை அடுத்து அங்கு இரண்டாவது மிகப் பெரிய பில்லியனர்களின் குழு உள்ளது; ஆயினும்கூட அங்கு 150 மில்லியன் மக்கள் நாள் ஒன்றிற்கு 1 அமெரிக்க டொலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றனர். சீன உயரடுக்கின் தொடர்ந்த அச்சம், அதன் போலிஸ் அரச நடவடிக்கைகள், பெருகி வரும் மகத்தான சமூக வெடிப்பிற்கு ஈடு கொடுக்க முடியாது என்பதுதான்.

தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், போட்டிகள் தாமதப்படுவதை விட முன்கூட்டியே தீவிரமாகும். புதிய அரசியல் எழுச்சி மற்றும் போர் என்ற காலத்தில் உலகம் நுழைந்துள்ளது. மனிதகுலத்திற்கு ஒரு முற்போக்கான தீர்வுகொடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டும்தான். சர்வதேச பதட்டங்களை அதிகரித்து போட்டியை பெருக்கிக் கொண்டிருக்கும் அதே உலக வழிவகைகள்தான் தொழிலாள வர்க்கத்தையும் மகத்தான முறையில் வலுப்படுத்தியுள்ளது; அதன் வரலாற்றுப் பணி, வங்குரோத்து ஆகிவிட்ட முதலாளித்துவ அமைப்பு முறையையும் அதனுடைய காலாவதியான உலகை தேசிய அரசுகளாக பிரித்துள்ள தன்மைகள் ஆகியவற்றையும் புரட்சிகரமாக தூக்கியெறிதல் ஆகும். அவைகள்தான் போருக்கும் மனிதகுலத்தை பீடித்துள்ள சமூகப் பேரழிவுகள் ஆகியவற்றிற்கும் மூலகாரணமாகும்.

(See this article in English)

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் 2010

சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

இலங்கையில் 26 ஜனவரி 2010 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் விஜே டயஸை ஆதரிக்குமாறும் எமது பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. 68 வயதான விஜே டயஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார். அவர் தனது இளமைக் காலம் முழுவதையும் புரட்சிகர மார்க்சிசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவராவார்.

உழைக்கும் மக்கள் இந்தத் தேர்தலில் பிரதான பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ளுகின்றனர்: அதாவது அரசாங்கத்துக்கும் தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்டது என்ன? 70,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும் அல்லது ஒருமுகப்படுத்திய தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதோடு நூறாயிரக் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதுடன் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பான பதட்ட நிலைமைகள் காணப்படுகின்றன. இலங்கை ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற இனவாத அரசியலுக்கு செலுத்த நேர்ந்துள்ள விலை இதுவேயாகும்.

முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் யுத்தக் குற்றங்களை இழைப்பதிலும் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்களை செய்வதிலும் தலைமை வகித்தவர்கள். 2006 ஜூலையில் இராஜபக்க்ஷ மீண்டும் ஆரம்பித்து வைத்த யுத்தத்தை ஜெனரல் பொன்சேகா நிறைவேற்றினார். கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொது மக்களை இராணுவம் கொன்றதோடு புலிகளின் தோல்விக்கு பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 280,000 பேர்களை அடைத்து வைத்திருந்தது. பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தீவு முழுவதும் இயங்கி வந்த கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இராஜபக்க்ஷ யுத்தத்துக்கு செலவிடுவதற்காக இலங்கை தீவை முழுமையாக அடகுவைத்துள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், நாடானது சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனுக்காக அதன் நிபந்தனைகளை செயற்படுத்துவதற்காக அரசாங்கமானது பொதுச் செலவை பிரமாண்டமாக வெட்டிக் குறைக்கத் தள்ளப்படும். தவிர்க்க முடியாமல் வளர்ச்சி அடைந்துவரும் அரசியல் எதிர்ப்பை நசுக்க யுத்த காலத்தில் உருவாக்கிய பொலிஸ்-அரச அடக்குமுறை வழிமுறைகளை அது பயன்படுத்தும்.

முதலாளித்துவத்தின் சகல பிரதிநிதிகளுக்கும் மற்றும் அதற்காக பரிந்து பேசுபவர்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட பிரச்சாரம் செய்கின்றது. தெற்காசியாவிலும் மற்றும் முழு பூகோளத்திலும் சோசலிச குடியரசை அமைப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்காக நாம் போராடுகின்றோம்.
இனவாதத்தின் வங்குரோத்து
யுத்தக் குற்றங்கள் மற்றும் தேசிய சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையின் ஊடாக பெறப்பட்ட தற்காலிக சமாதானத்தால் எதுவும் தீர்க்கப்படப் போவதில்லை. உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்ததில் அரசாங்கம் இழைத்த கொடூரங்களும் இனவாத பதட்ட நிலைமைகளும் மோதல்களும் புதிய வடிவங்களில் வெடிக்கும் என்பதை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளன.

யுத்தத்தையும் பொலிஸ் அரச ஒடுக்குமுறையையும் தவிர வேறொன்றும் தெரியாத ஒரு முழுத் தலைமுறை வளர்ந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குகள் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் சகல முயற்சிகளும் இனவாத அரசியலினால் பொறிந்துபோயுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இலங்கையில் முதலாளித்துவ ஆட்சிக்கு அடித்தளமாக இருப்பது இந்த இனவாத அரசியலே. இராஜபக்க்ஷவும் பொன்சேகாவும் வழங்கியுள்ள "தீர்வு" வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பையும் இலங்கைத் தீவு முழுவதும் பொலிஸ்-அரச அடக்குமுறை வழிமுறைகளையும் ஏற்படுத்துவது அவர்களுக்கு தவிர்க்கமுடியாததாக்குகின்றன.

இதே போல், யுத்தத்தின் முடிவில் புலிகள் நசுக்கப்பட்டமையானது வட இலங்கையில் ஒரு தனியான தமிழ் முதலாளித்துவ அரசை கட்டியெழுப்பும் புலிகளின் முன்நோக்குக்கு கிடைத்த தீர்ப்பாகும். புலிகளினுடைய இன வழியை அடிப்படையாகக் கொண்ட வேலைத் திட்டமானது, தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் ஒரு புறமிருக்க அவர்கள் சிங்களத் தொழிலாளர்களுக்கு கூட வேண்டுகோள் விடுக்க முடியாதவர்களாக்கியிருந்ததுடன் சிங்கள பொது மக்கள் மீது இரத்தம் தோய்ந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சகல அரசியல் எதிர்ப்புக்களையும் இரக்கமின்றி நசுக்கியதன் மூலம் வெளிப்பட்ட புலிகளின் ஜனநாயக விரோதப் பண்பு, தமிழ் மக்களை அந்நியப்படுத்த மட்டுமே வழி செய்ததோடு இறுதியில் அவர்களது ஆதரவை இழக்கவும் வழிவகுத்தது.

புலிகளின் அரசியலானது அரசியல் நிலைமைகளின் மாற்றங்களில் இருந்து, குறிப்பாக 11 செப்டெம்பர் 2001 தாக்குதலின் பின்னர் அமெரிக்காவினால் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என பொய் பெயரிட்டு முன்னெடுத்த யுத்தத்தில் இருந்து அவர்களை தப்பிக்க முடியாதவர்களாக்கியது. இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சி அடைவதையிட்டு இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் மேலும் கவலை கொண்ட நிலையில், இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்ந்து நடைபெறுமானால் அவர்களது நலன்களுக்கு பாதகமாக இருப்பதாக பெரும் வல்லரசுகள் முடிவெடுத்தன. இராஜபக்க்ஷ புலிகளுக்கு எதிரான தனது சொந்த இரக்கமற்ற "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" நியாயப்படுத்த புலிகளின் பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டதோடு பெரும் வல்லரசுகள் அனைத்தும் இராஜபக்ஷவுக்கு உதவி செய்தன.

தெற்காசியாவில் பெரும் வல்லரசுகளின் போட்டி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவு சமாதானத்தை கொண்டுவராது. மாறாக, அது பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் மேலும் மோதல்களை மட்டுமே கொண்டுவரும் உலக அரசியலிலான நெருக்கடியின் ஆழத்தின் அளவு பற்றிய எச்சரிக்கையை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. 2008 செப்டெம்பரில் வெடித்த பூகோள நிதி நெருக்கடியில் வெளிப்பட்ட, முதலாளித்துவ அமைப்பின் தீர்க்க முடியாத நெருக்கடியால் சர்வதேச உறவுகள் ஆழமாக ஸ்திரமிழந்துள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கான பாரிய படை நகர்வு பற்றிய ஒபாமா நிர்வாகம் அண்மையில் அறிவித்தமையும் மற்றும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பாகிஸ்தானை அது அழுத்தம் கொடுக்கின்றமையும் அமெரிக்காவின் பிரதிபலிப்புக்கு எடுத்துக்காட்டாகும். "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையின் பின்னால், அமெரிக்கா அதனுடைய பிரதான எதிரிகளுக்கு எதிராக, குறிப்பாக சீனாவுக்கு எதிராக, உலக அரசியலில் நீதிபதியாக அதனுடைய பாத்திரத்தை பேணிக்கொள்வதன் பேரில், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய எரிசக்தி வளம்கொண்ட பிராந்தியங்களின் மீது மூலோபாய நிலையை ஸ்தாபித்துக்கொள்ள முயற்சிக்கின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ள அதன் மூர்க்கத்தனமான இராணுவாதம், ஏற்கனவே மத மற்றும் இனப் பகைமைகளால் பிளவுண்டு போயுள்ள முழு இந்திய உபகண்டத்தையும் நிலைகுலைய செய்துகொண்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது. இராஜபக்க்ஷ அவரது நன்மைக்காக ஒரு பெரும் வல்லரசுக்கு எதிராக இன்னொரு வல்லரசை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார். யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரிக்குமாறு அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக சீனவின் ஆயுத, நிதி ஆதரவிலும் இராஜதந்திர உதவியிலும் கனமாக தங்கியிருந்தார். அதற்கு பிரதியுபகாரமாக, ஹம்பந்தோட்டையில் ஒரு பிரதான துறைமுக வசதி உட்பட சீனாவின் முதலீட்டுக்கு முன்னுரிமையளித்தார். இலங்கையில் சீன செல்வாக்கின் வளர்ச்சியானது இந்தியாவும் அமெரிக்காவும் இராஜபக்க்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் அவருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளது.

இராஜபக்க்ஷவின் சூழ்ச்சித் திட்டங்கள், முதலாளித்துவ உலக ஒழுங்கை பிளவுறச் செய்து கொண்டிருக்கும் கசப்பான சர்வதேச முரண்பாடுகளுக்குள் இலங்கையை இழுத்து தள்ளியுள்ளது. அண்மைய அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் அறிக்கையானது இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையானது ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தின் "மையப்பகுதியில்" அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. தனது எதிரிகளிடம் "இலங்கையை இழக்காமல் இருக்க" வாஷிங்டனின் உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கவாறு, அமெரிக்க புவிசார் மூலோபாய யதார்த்தங்களை கவனத்தில் எடுக்கும் "ஒரு வலுவான அணுகுமுறைக்காக" வாஷிங்டனின் முன்னைய மனிதாபிமான பாசாங்குகளை குப்பைக் கூடைக்குள் போடுமாறு அந்த அறிக்கை வேண்டுகோள் விடுக்கின்றது.

வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி

உலகம் முழுவதிலும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளை போலவே, இலங்கைத் தொழிலாளர்களும் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் உரிமைகள் மீதான முதலாளித்துவ தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். பூகோள நிதி நெருக்கடியானது இலங்கையில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேலும் பொடியாக்குகிறது. அரச கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதமாக, அதாவது 4.1 ட்ரில்லியன் ரூபாய்களாக இப்போதுள்ளது. இதற்கு இராணுவச் செலவே பிரதான காரணமாகும்.

தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியும் சீற்றமும் பெருந்தோட்டங்கள், துறைமுகம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார மற்றும் நீர்வளங்கள் சபைகளிலும் புதுப்பிக்கப்பட்ட போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்க சார்பு மற்றும் எதிர்க்கட்சி சார்பு தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் நசுக்கி வந்துள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் அவர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு தலைவணங்கி அவர்களுடைய உறுப்பினர்களை விற்றுத் தள்ளியுள்ளனர்.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக துருப்புக்களை நிறுத்திய இராஜபக்க்ஷ, தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்ய தனது அவசரகால அதிகாரங்களைப் பாவித்ததோடு ஊடக விமர்சகர்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்களை ஊக்குவித்தார். அவரது யுத்தத்துக்கு பின்னரான "தேசத்தை கட்டியெழுப்பும்" நடவடிக்கை சந்தை சார்பு மறுசீரமைப்பையும் தனியார்மயத்தையும் துரிதப்படுத்துகிறது. இது இலங்கைத் தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். நாட்டை "சர்வதேச ரீதியில் போட்டியிடத் தக்கதாக" ஆக்குவதற்கு அடுத்து வரும் அரசாங்கம் சம்பள மட்டத்தையும் பொதுச் செலவையும் வெட்டித்தள்ள முயற்சிக்கும். உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாள வர்க்கம் வறுமைக்குள் தள்ளப்பட்டதனால் ஏற்கனவே சீரழிந்து போயுள்ள மேற்கத்தைய ஏற்றுமதி சந்தைகளுக்கு ஆசிய நாடுகள் வாய்ப்புத் தேடி போட்டியிடும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் குறிப்பாக கடுமையானதாக இருக்கும்.

இலாப நோக்கம் கொண்டதும் மற்றும் காலாவதியான தேசிய-அரச அமைப்புமுறைக்கும் எதிராக வழிகாட்டப்படும் முழு அனைத்துலக தொழிலாள வர்க்கத்துக்குமான ஒரு சோசலிச மூலோபாயத்தினாலேயே வறுமை மற்றும் உலக யுத்த ஆபத்துக்கு எதிராக தொழிலாளர்களால் அவர்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

சம்பள உயர்வு போராட்டத்தின் போது, அக்கரபத்தனையில் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஒத்துழைப்புடன் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக தமது நடவடிக்கை குழுவை ஸ்தாபித்ததுடன் ஏனைய பகுதி தொழிலாள வர்க்கமும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, இலாப அமைப்புக்கும் மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரள்வதற்கான தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான முதல் படியை அவர்களது நடவடிக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கைகள்
* வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்
முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும் சகல கைதிகளையும் விடுவிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. உண்மையான ஜனநாயக ரீதியான தீர்வுக்கான அடித்தளத்தை உருவாக்க, தீர்க்கப்படாத சகல ஜனநாயக பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதன் பேரில் அரசியலமைப்புச் சபை ஒன்றை கூட்டுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய ஒரு சபை சாதாரண உழைக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட வேண்டும். உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த சகல பாகுபாடான சட்டங்களுக்கும் முடிவுகட்டப்பட வேண்டும்.

* சகலருக்கும் பாதுகாப்பான சிறந்த சம்பளத்துடனான தொழில்கள் வேண்டும்
சிறந்த சம்பளத்துடனான இலட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும் பொது வீடமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு வசதிகள், வீதிகள் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களையும் கட்டியெழுப்பவும் பொதுத் தேவைகளுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். சம்பள குறைப்பின்றி மற்றும் வாழ்க்கை செலவுப் புள்ளிக்கேற்ற ஊதியத்துடன் வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாக குறைப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பிரேரிக்கின்றது. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் மற்றும் பெண்களையும் இளைஞர்களையும் இரவு வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ள, பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கவும் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் இருப்பவை உட்பட சகல பிரதான தொழிற்துறை கூட்டுத்தாபனங்களையும் பொதுச்சொத்தாக ஜனநாயக கட்டுப்பாட்டில் இருப்பவையாக மாற்றப்பட வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

* இலவச மற்றும் உயர்தரம் வாய்ந்த கல்வி ஏற்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய கல்விமுறையானது சமத்துவமின்மையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் வசதிகள் பற்றாக்குறையான, ஆசிரியர்கள் பற்றாக்குறையான பொது பாடசாலைகளில் படிக்கத் தள்ளப்பட்டுள்ள அதே சமயம், செல்வந்தர்களின் மகன்மாரும் மகள்மாரும் நவீன வசதிகள், வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை தனியார் பாடசாலைகளில் அனுபவிக்கின்றனர். தமது கல்வியை முன்னெடுக்க விரும்பும் சகலருக்கும் பல்கலைக்கழக மட்டம் வரை இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்க அரசாங்கப் பாடசாலை முறையை பரந்தளவில் விரிவுபடுத்த வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. தற்போதுள்ள பாடசாலைகள் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், கணனி வசதிகள் மற்றும் நவீன ஒலி-ஒளி உபகரணங்கள், அதே போல் விளையாட்டு மற்றும் கலைத்துறை நடவடிக்கைகளுக்கான வசதிகளுடன் தரம் உயர்த்தப்படல் வேண்டும்.

* பூரணமான சுகாதார பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்
டெங்கு, மலேரியா, அம்மை மற்றும் காசநோய் போன்ற தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். புதிய நோய்களாக
H1N1 மற்றும் பறவைக் காய்ச்சலும் பரவுகின்றன. சமாளித்துக்கொள்ளக் கூடியவர்கள் தனியார் வைத்தியர்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை நாடும் அதே வேளை, வெகுஜனங்கள் மேலும் மேலும் நிதிப் பற்றாக்குறை நிலவும் பொது சுகாதார முறையிலேயே தங்கியிருக்கின்றனர். இலவசமான பூரணமான உயர்ந்த தரத்திலான சுகாதார பராமரிப்பை வழங்க நல்ல வசதிகள், தக்க ஊழியர்களை கொண்ட அரசாங்க ஆஸ்பத்திரிகளை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

* சகலருக்கும் பொருத்தமான வீடமைப்பு வசதிகள் கட்டியெழுப்படவேண்டும்
பல குடும்பங்கள் குழாய் நீர், மின்சாரம் மற்றும் தக்க மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தரங்குறைந்த வீடுகளில் வாழ்வதோடு உரிமையாளர்களின் வாடகை அதிகரிப்பு மற்றும் சட்டப்படி வெளியேற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு சகல அத்தியாவசிய வசதிகளும் உள்ளடக்கிய, செலவைத் தாங்கக்கூடிய, வாடகை கட்டுப்பாட்டுடனான பொது வீடமைப்பை கட்டியெழுப்ப சோ.ச.க. பரிந்துரைக்கின்றது.

* பெண் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்
குறைந்த ஊதியத்துடனான தொழில் மற்றும் வீட்டு வேலைப்பளு ஆகிய இரட்டைச் சுமைகளை பெண் தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில், தேயிலை கொழுந்து பறிப்பதில், இறப்பர் மரம் கீறுவதில் மற்றும் ஏனைய விவசாயத் தொழில்களில் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். பூகோள பொருளாதார நெருக்கடியால் பத்தாயிரக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைப் பெண் தொழிலாளர்கள் தொழிலை இழக்கத் தள்ளப்பட்டதோடு பொருளாதார பின்னடைவானது மத்திய கிழக்கையும் தாக்கிய நிலையில் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக அல்லது ஊழிய வேலைகளைச் செய்து பெற்ற வருமானத்தையும் தொழிலையும் இழக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான சிறுவர் பராமரிப்பு மற்றும் முழு சம்பளத்துடனான கர்ப்ப கால விடுமுறை உட்பட பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் மற்றும் நிலைமைகள் வழங்கப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாக்க போராடுகிறது. திருமண சட்டங்கள் உட்பட பால் பாகுபாட்டை சட்ட விரோதமாக்க நாம் அழைப்பு விடுக்கின்றோம். கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படுவதோடு சகலருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக தமது திறமைகளையும் ஆளுமைகளையும் முழுமையாக மேம்படுத்திக்கொள்ளும் ஒரு அறிவுபூர்வமான கலாச்சார சூழ்நிலையை முன்நிலைப்படுத்துவதற்காவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.

* சிறு விவசாயிகளுக்கு உதவிகள் அளிக்கப்பட வேண்டும்
நிலப் பற்றாக்குறை பெரும்பாலான சிறு விவசாயிகளை துன்பத்துக்குள்ளாக்கியுள்ளதோடு இந்தப் பிரச்சினை உள்நாட்டு யுத்தத்தை தூண்டுவதிலும் குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கில் வன்னிப் பிரதேசத்திலும் மற்றும் கிழக்கிலும் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் நிலமற்ற சிங்கள வறியவர்களை காலனிகளை ஏற்படுத்தி வேண்டுமென்றே குடியேற்றின --இது இனவாத பதட்ட நிலைமைகளுக்கு தூபமிட்டது. யுத்தத்தின் முடிவுடன் இத்தகைய கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நிலமற்ற விவசாயிகளுக்கு இனப் பாகுபாடின்றி அரச நிலங்களை பகிர்ந்தளிக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. வறிய விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பெற்ற சகல பழைய கடன்களும் இரத்துச் செய்யப்படும் அதே வேளை, செலுத்தக்கூடிய நிபந்தனைகளின் படி கடன்கள், விவசாய உபகரணங்கள், உரம் மற்றும் மருந்துகள், மற்றும் மீனவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக
இலங்கையில் கால்நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கொள்கையை நிரூபித்துள்ளது: முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகக் கடமைகளை இட்டு நிரப்ப இயற்கையிலேயே இலாயக்கற்றது என்பதே அது. சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கான போராட்டத்தில் தம்மைச் சூழ ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, சகலருக்கும் சமாதானம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்ய முடியும். வெகுஜனங்களை முதலாளித்துவத்துடன் கட்டிப்போடும் சகல அரசியல் சக்திகளிடம் இருந்தும் அடிப்படையில் பிரிந்து செல்வதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
முதலாளித்துவக் கட்சிகள் இராஜபக்க்ஷ அல்லது பொன்சேகாவுக்கு பின்னால் அணிதிரண்டிருப்பது போல், இலங்கை முதலாளித்துவம் இதற்கு முன்னர் இந்தளவு அரசியல் ரீதியில் அம்பலமாகியிருக்கவில்லை. லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய முன்னாள் இடது கட்சிகள், உறுதியாக இராஜபக்க்ஷவின் பின்னால் நிற்கும் அதேவேளை, ஜே.வி.பி. யின் சிங்கள பேரினவாதம், அந்தக் கட்சி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் நிறைவாக அம்பலத்துக்கு வந்துள்ளது. மே மாதம் வரை புலிகளின் ஊதுகுழலாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இரு யுத்தக் குற்றவாளிகளில் யார் அவர்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதியுபகாரம் செய்வார் எனத் தெரிந்துகொள்ள கேலிக்கூத்தான பின் கதவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது.
விக்கிரமபாகு கருணாரட்னவை நிறுத்தியுள்ள நவ சம சமாஜக் கட்சி மற்றும் சிறிதுங்க ஜெயசூரியவை நிறுத்தியுள்ள ஐக்கிய சோசலிசக் கட்சியின் பக்கமே எவ்வாறெனினும் மிகவும் நச்சுத்தனமான பாத்திரம் இட்டுநிரப்பப்பட்டுள்ளது. அவர்கள் யுத்தத்தின் எதிரிகளாகவும் சோசலிசத்தின் ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் சந்தர்ப்பவாதிகளாக திறமையாகச் செயற்படுபவர்களாக அவர்களின் நீண்டகால இழிந்த பாத்திரம் வரலாற்றால் காட்டப்பட்டுள்ளது போல், அவர்கள் சுயாதீன தொழிலாள வர்க்க அரசியலை முழுமையாக எதிர்ப்பவர்களாகும்.

இந்த ஆண்டு முற்பகுதியில் "சுதந்திரத்துக்கான மேடை" என்ற யூ.என்.பி. யின் போலி மேடையில் கூட்டுச் சேர்ந்துகொண்ட பின்னர், நவ சம சமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இப்போது பொன்சேகாவும் இராஜபக்க்ஷவும் முதல் சுற்றில் வெற்றிபெறுவதை தடுப்பதை இலக்காகக் கொண்டே போட்டியிடுவதாக தெரிவிக்கின்றனர். முன்னைய ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் செய்தது போல், தேர்தல் இரண்டாவது சுற்றுக்குச் செல்லவேண்டுமெனில், ஏதாவதொரு முதலாளித்துவ வேட்பாளரை "குறைந்த கெடுதி கொண்டவர்" என அங்கீகரிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் பற்றிய ஊனமுற்ற இந்த முன்மொழிவுகள், இந்த அரசியல் ஸ்தாபனத்துடன் முழுமையாக உடன்படுவதோடு, வெகுஜன அதிருப்தியை தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான பாதுகாப்பு வால்வு ஆக முதலாளித்துவத்துக்கு சேவை செய்கின்றன.

தெற்காசியாவில் சோசலிசத்துக்கான போராட்டம்

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ளடங்கியுள்ள அனைத்துலக சோசலிசத்தின் உயர்ந்த கொள்கைகளே சோசலிச சமத்துவக் கட்சியின் அடித்தளமாகும்.
லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி 1917 ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த வேலைத்திட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாக்கின்றது: அந்தப் புரட்சி முதலாளித்துவம் மற்றும் வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்கான உலக சோசலிசப் புரட்சியாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக போராடுவதற்கு ட்ரொட்ஸ்கி 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம், தோன்றிவரும் பழமைவாத ஆளும் கும்பல் என்றவகையில், தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள "தனி நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச விரோத முன்நோக்கை அபிவிருத்தி செய்தது. 1991ல் ஸ்ராலினிஸ்டுகள் சோசலிசத்தை கைவிட்டு, சோவியத் ஒன்றியத்தை கலைத்ததுடன் முதலாளித்துவத்தை பதிலீடு செய்த போது, ஸ்ராலினிசத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்ப்பு இறுதியாக சரியென மெய்ப்பித்துக்காட்டப்பட்டது.

சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த, பாட்டாளிகளின் தூரதிருஷ்டியுள்ள பிரதிநிதிகளின் மரபுரிமையை சோசலிச சமத்துவக் கட்சி தனது அத்திவாரமாகக் கொண்டுள்ளது. 1940களில், தெற்காசிய தொழிலாள வர்க்கத்தினுள் ஆழமாக வேரூன்றிய இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியின் (பி.எல்.பி.ஐ.) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச முன்நோக்கை அபிவிருத்தி செய்தனர். அதைத் தொடர்ந்து 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டமை, சோசலிசத்துக்கும் இலங்கை பாட்டாளிகளின் ஐக்கியத்துக்கும் எதிரான ஒரு பெரும் அடியாகும்.
லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்களாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் முதலாளித்துவ இனவாதத்தை சளைக்காமல் எதிர்த்துப் போராடிவந்துள்ளன. சிங்களத்தை தேசிய மொழியாக்கிய மற்றும் பெளத்தத்தை அரச மதமாக்கிய அரசியலமைப்புக்கும், ஜே.வி.பி. யின் போலி மக்கள்வாத சிங்களப் பேரினவாதத்துக்கும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை இடைவிடாது எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் வர்க்கப் போராட்டம் புத்துயிர் பெறும் நிலையில், இத்தகைய போராட்டங்களின் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்துக்கு அத்தியாவசியமான அரசியல் வழிகாட்டியாக அமையும்.

எங்களது முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கும் அனைவரையும் எமது தேர்தல் பிரச்சாரத்தில் நடைமுறையில் பங்குபற்றுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது வேட்பாளரை பிரச்சாரப்படுத்தவும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் உதவுவதோடு, எமது தேர்தல் இலக்கியங்களை விநியோகிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச பிரசுரமான
உலக சோசலிச வலைத் தளத்துக்கு பரந்தளவில் வாசகர்களை ஊக்குவிக்கவும் உதவுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கையில் பொனபாட்வாத ஆட்சியின் ஆபத்து
விஜே டயஸ்
08 டிசம்பர் 2009

இலங்கையில் ஜனவரி 26 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரவேசம், தீவில் பொலிஸ்-அரச ஆட்சிக்கான முன்கூட்டிய தயாரிப்புகள் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது. ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், உழைக்கும் மக்கள் மீது புதிய பொருளாதார நெருக்கடிகளை திணிக்கும் வழிமுறையாக, ஆளும் தட்டின் சக்திவாய்ந்த பகுதியினர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான பொன்சேகாவை ஆதரிக்கின்றனர்.

கடந்த மாதம் இராஜினாமா செய்வதற்கு முன்னர், பொன்சேகா இலங்கையின் உயர் மட்ட ஜெனரலாக இருந்தார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ், அவர் கடந்த மே மாதம் தோல்வி கண்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்தார். கடைசி மாத மோதல்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களால் 7,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் தோல்விகண்ட பின்னர் ஆண்கள், பென்கள் மற்றும் சிறுவர்களுமாக 250,000 க்கும் மேற்பட்ட பொது மக்களை இராணும் "நலன்புரி முகாங்களுக்குள்" அடைத்தது. அங்கு அவர்கள் டிசம்பர் 1ம் திகதி வரை சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

யுத்தத்தின் முடிவில், ஆளும் அரசியல்-இராணுவ குழுவில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்த பொன்சேகா இராஜபக்ஷவிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக் கொண்டது, அவர்கள் கூட்டாக இழைத்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினையினால் அல்ல, மாறாக யுத்த வெற்றியின் புகழ் யாருக்கு சேரவேண்டும் என்ற பிரச்சினையினாலேயே. இராஜபக்ஷ தனது ஆட்டங்கண்ட ஆளும் கூட்டணிக்கு முட்டு கொடுக்கவும் தொடர்ச்சியாக நடந்த மாகாண சபை தேர்தல்களில் வெற்றி பெறவும் யுத்த வெற்றியின் சிற்பியாக தன்னை முன்னிலைப்படுத்த முயற்சித்ததன் மூலம், அவர் இராணுவ அதிகாரிகள் மத்தியில் ஆழமான சீற்றத்தை தூண்டிவிட்டார். பொன்சேகா இராணுவத் தளபதி என்ற நிலையில் இருந்து பெருமளவில் பெயரளவிலான பதவியான பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் என்ற நிலைக்கு மாறியதை அடுத்தே அவர் இந்த கசப்புனர்வுகளின் ஊதுகுழலானார். அவர் எதிர்க் கட்சிகளுடன் இரகசியமாக நடத்திய பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் பகிரங்கமாயின. இராஜபக்ஷ முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அறிவித்த போது, பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக பிரவேசித்தார்.

பொன்சேகா எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர் அல்ல. அவர் சந்தேகத்துக்கிடமின்றி ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியுடனும் (ஜே.வி.பி.) தேர்தல் உடன்படிக்கைகளை செய்துகொண்டிருந்தாலும், அவர் தேர்வு செய்யப்பட்டால் அவர் அந்த கட்சிகளின் விதிகளுக்கோ அல்லது கொள்கைகளுக்கோ கட்டுப்பட்டவராக இருக்க மாட்டார். இந்த நிலைமையானது இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய அரசியலில் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காததோடு பாராளுமன்ற அரசியலின் ஆழமான சீரழிவை கோடிட்டுக் காட்டுகிறது. தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை நடத்தி மற்றும் சந்தை சார்பு மறுசீரமைப்புகளை செய்த பின்னர், இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளான யூ.என்.பி. மற்றும் இராஜப்கஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) பரந்தளவில் நம்பிக்கையீனத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளன. சிங்கள பேரினவாத ஜே.வி.பி., வெகுஜனங்களின் அதிருப்தி மற்றும் அந்நியப்படுதலை சமாளிக்கும் ஒரு அரசியல் பாதுகாப்பு வாயிலாக செயற்பட்ட பின்னர், 2004ல் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணியில் இணைந்துகொண்ட பின்னர் துரிதமாக ஆதரவை இழந்தது.
பாராளுமன்ற ஆட்சியின் விதிமுறைகள் ஏற்கனவே காலங்கடந்து விட்டது. இராஜபக்ஷ கையாளுவதற்கு எளிதற்ற 17 கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கின்றார். அனைத்து கட்சிகளும் உலகின் பிரமாண்டமானவற்றில் ஒன்றாக உள்ள அமைச்சரவையில் ஏதாவது ஒரு பதவியை கொண்டுள்ளன. இதன் விளைவாக, மேலும் மேலும் அமைச்சரவையையும் பாராளுமன்றத்தையும் ஓரங்கட்டி, தனது சகோதரர்கள், நெருங்கிய அரசியல் நன்பர்கள், நம்பிக்கைக்குரிய அதிகாரத்துவவாதிகள் மற்றும் ஜெனரல்கள் உள்ளடங்கிய ஒரு குழுவின் ஊடாக இயங்குகிறார். அவரது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் பரந்த அதிகாரங்கள் விசாரணையின்றி கைது செய்ய, தணிக்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்க அனுமதிக்கும் தற்போதைய அவசரகால விதிகளால் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. அவரது அரசாங்கம் பல சமயங்களில் அரசியலமைப்பை அவமதித்துள்ளதோடு நாட்டின் உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் நிராகரித்துள்ளது.

தனது பிரச்சாத்தை ஆரம்பித்தபோது, இராஜபக்ஷவை "தரங்குறைந்த சர்வாதிகாரி" என வகைப்படுத்திய பொன்சேகா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தூக்கிவீசுமாறு யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இந்த வாக்குறுதியிலோ அல்லது ஜெனரலுக்கு ஜனநாயக ஆடை உடுத்தும் எதிர்க் கட்சிகளின் முயற்சிகளிலோ நம்பிக்கை வைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் தாம் எதிர்க் கட்சியில் இருக்கும் போது வழமையாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளிப்பார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை மீறிவிடுவார்கள். இராஜபக்ஷவுக்கு முன்பிருந்த சந்திரிகா குமாரதுங்க, 1994ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால், 2004ல் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட யூ.என்.பி. அரசாங்கத்தை எதேச்சதிகாரமாக பதவி விலக்க அதன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினார்.

எவ்வாறெனினும், முன்னைய இலங்கை ஜனாதிபதிகளுக்கு இருந்தது போல், பொன்சேகாவுக்கு அரசியல் கட்சியோ அல்லது அவருக்கென்று சொந்தமான அரசியல் பின்னணியோ கிடையாது. அவர் தேர்வு செய்யப்பட்டால், போட்டியிடும் அரசியல் சக்திகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் நிலையில், அவர் தனது ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தத் தள்ளப்படுவார். அவரது பிரதான அங்கம், அவரை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகளோ மற்றும் நிச்சயமாக வாக்காளர்களோ அல்ல. அவர் எல்லாவற்றுக்கும் மேலாக அரச இயந்திரத்தின், குறிப்பாக நாட்டின் பிரமாண்டமான இராணுவத்தின் அதிகாரிகள் தட்டினரதும் மற்றும் தமது பொருளாதார திட்டங்கள் தடைப்பட்டுள்ளதையிட்டு மேலும் மேலும் அதிருப்தி கண்டுள்ள ஆளும் கும்பலின் பகுதியினரதும் ஊதுகுழலாவார். பொன்சேகா ஒரு சிறந்த பொனபாட்வாத புள்ளியாக தோன்றியுள்ளார். பொன்பாட்வாதி என்றால், அரசியல் சச்சரவுகளில் இருந்து மேலெழும்புபவராக தோன்றும், தேசத்தின் நன்மைக்காக கொள்கைகளை அமுல்படுத்துவதாக கூறிக்கொள்ளும், மற்றும் வெளிப்படையான இராணுவ சர்வாதிகாரத்துக்கு படிக்கல்லாக விளங்கும் ஒரு பலம் வாய்ந்த நபராவார்.

1930களில் ஜேர்மனியில் நாசிக்களுக்கு முதன்மையாக இருந்த அரசாங்கங்கள் பற்றிய லியோன் ட்ரொட்ஸ்கியின் கூர்மையான ஆய்வுகளில், நிச்சயமான நிலைமைகளின் கீழ் மட்டுமே பொனபாட்டிசம் தோன்றும் என விளக்கியுள்ளார். "இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள், சுரண்டுபவர்கள் மற்றும் சுரண்டப்படுபவர்கள் ஆகிய இரு சமூக தட்டுக்களுக்கிடையிலான போராட்டம் அதன் உச்ச பதட்ட நிலைமையை அடையும்போது அதிகாரத்துவம், பொலிஸ் மற்றும் இராணுவம் மேலாதிக்கம் செய்வதற்கான நிலைமை ஏற்படும். அரசாங்கம் சமுதாயத்தில் இருந்து 'சுயாதீனமடையும்'. நாம் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம்: தக்கையன்றில் இரு முள் கரண்டிகளை ஒரே சீரான அமைப்பில் குத்தினால், தக்கையை ஊசி முனையில் வேண்டுமானாலும் நிறுத்த முடியும். இதுவே துல்லியமாக பொனபாட்டிசத்தின் திட்டமாகும்," என ட்ரொட்ஸ்கி எழுதினார். அதன் உண்மையான பண்பின்படி, அத்தகைய முறையிலான ஆட்சி ஸ்திரமற்றதும் தற்காலிகமனதுமாகும்.
இன்று இலங்கையில், அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமைத்துவங்களின் துரோகத்தின் விளைவாக, வர்க்க முரண்பாடுகள் இன்னும் வெளிப்படையான அரசியல் வடிவத்தை எடுக்கும். பிரதான முதலாளித்துவ கட்சிகளைப் போல், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் மோசமாக சீரழிந்துள்ளதோடு, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு விசுவாசமான தட்டினருக்கும் கொஞ்சம் அதிகமாகவே விசுவாசமாக செயற்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ள போதிலும் அவை தொழிற்சங்க தலைமைத்துவத்தால் உடனடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

எவ்வாறனெனினும், அரசியல் ஸ்தாபனம் நனங்கு விழிப்புடன் இருப்பதைப் போல், தீவின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியானது தீவிரமான சமூக பதட்ட நிலைமையை தோற்றுவிக்கின்றது. எண்ணிலடங்கா பொருளாதரா மற்றும் மனித விலை கொடுத்தே இராஜபக்ஷ தனது இராணுவ வெற்றியை அடைந்தார். இராஜபக்ஷவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பாதுகாப்பு செலவு 629 பில்லியன் ரூபாய்களை (5.5 பில்லியன் அமெரிக்க டொலர்) அல்லது மொத்த அரசாங்க வருமானத்தில் 25 வீதத்தையும் தாண்டியுள்ளது. தீவின் மொத்தக் கடன் இந்த ஆண்டு 4,023 பில்லியன் ரூபாய்கள் அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதத்துக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இராஜபக்ஷ தனது யுத்தத்துக்கு செலவிடுவதில், குறைந்த வட்டிக்கு சர்வதேச சந்தையில் கடன் வாங்குவதில் தங்கியிருந்தார். ஆனால் இப்போது பூகோள நிதி நெருக்கடியை அடுத்து அதுவும் காய்ந்து போய்விட்டது. சர்வதேச பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஏற்றுமதியையும் பாதித்ததனால், கூர்மையான அந்நிய செலாவணி நெருக்கடியையும் தோற்றுவித்தது. இதனால் அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது. கடன் வழங்கும்போது விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளில், இந்த ஆண்டு வரவு செலவு துண்டு விழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தியில் 9 முதல் 7 வீதம் வரையும் அடுத்த ஆண்டு மேலும் 2 வீதத்தால் குறைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இராஜபக்ஷ கடந்த மாதம் முன்வைக்க வேண்டிய 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைப்பதன் மூலம், அரசாங்கத் துறை தொழில்கள், சம்பளம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான தவிர்க்க முடியாத கடும் வெட்டுக்களை தாமதப்படுத்தியுள்ளார். அதே சமயம், அவர் அரசாங்கத் துறையில் சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைத்துள்ளதோடு, துறைமுகம் மற்றும் அரசுக்கு சொந்தமான மின்சார சபை, தண்ணீர் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்குவதன் பேரில், அத்தியவசிய சேவைகள் கட்டளையை பிறப்பிப்பதற்காக அவர் முதல் தடவையாக தனது அவசரகால அதிகாரங்களை அண்மையில் பயன்படுத்தினார். சகல தொழிற்சங்கங்களும் உடனடியாக வளைந்து கொடுத்து தமது பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டன.

வர்த்தகர்களின் சில பகுதியினர் அரசாங்க செலவுகளை கடுமையாக குறைக்குமாறு கோருகின்றனர். கடந்த வாரம் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் அனுர ஏகனாயக்க, "அடிப்படையில் அரசாங்கத் துறையின் திறமையின்மை காரணமாக உற்பத்திச் செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக" கசப்புடன் முறைப்பாடு செய்ததோடு "மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புத் தொகைகளை வழங்கும் அர்த்தமற்ற நடவடிக்கைகளை" நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய நடவடிக்கைகள், யுத்தத்தின் முடிவு வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிவதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளது என ஏற்கனவே வெறுப்பும் சீற்றமும் அடைந்துள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் போராளிக்குணத்தை தவிர்க்க முடியாமல் உருவாக்கும்.

கொழும்பில் உள்ள ஆளும் தட்டு, தேர்தலின் பின்னர் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றது. சில தட்டினர் தொடர்ந்தும் இராஜபக்ஷவை ஆதரிக்கும் அதே சமயம், ஏனையவர்கள் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக அரச இயந்திரத்தை கையாள்வதற்கும், தேவைப்படும் போது, அரசியல் கட்சிகளையும் பாராளுமன்றத்தையும் நிராகரிக்கக் கூடிய ஒரு பலம்வாய்ந்த மனிதனாக பொன்சேகாவை ஆதரிக்கின்றனர். பாதுகாப்பு இயந்திரத்தின் ஆதரவைக் கொண்ட இரக்கமற்ற இராணுவத் தளபதி என்ற அவரது நிரூபிக்கப்பட்ட சாதனை, அவரை ஸ்திரமற்ற பாராளுமன்ற கூட்டணியில் தங்கியிருக்கும் இராஜபக்ஷவில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பொன்சேகா, மோசடியை துடைத்துக் கட்டல், பாதாள உலகத்தை துப்புரவு செய்தல் மற்றும் சமுதாயத்தில் "ஒழுக்கத்தை" ஸ்தாபித்தல் என தனது திட்டங்களை வலியுறுத்த தனது தேர்தல் அறிவிப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சகல பிரதான அரசியல் கட்சிகளும், இராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான போட்டியில் ஏதாவதொரு பக்கம் சார்ந்து நிற்கின்றன. முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் பெயரளவில் பொன்சேகாவை எதிர்க்கும் அதே வேளை, இராஜபக்ஷவுக்கான மாற்றீடாக அவர்கள் யூ.என்.பி. யை ஆதரிப்பது, அதே வழியில் ஜெனரலை முன்வைப்பதற்கு இந்த இந்த வலதுசாரி முதலாளித்துவ கட்சிக்கு உதவியுள்ளது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பெரும் ஆபத்து எதுவெனில், அது முற்றிலும் அரசியல் ரீதியில் தயாரில்லாமல் இருப்பதேயாகும். தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அதே போல் தொழிற்சங்கங்கள் தொடர்பான அலட்சியமும் பகைமையும், பொலிஸ்-அரச ஆட்சி தோன்றுவதற்கு எதிராக போராடுவதற்கான அரசியல் வேலைத் திட்டமாகவும் தலைமைத்துவமாகவும் தானாகவே மாற்றம் பெறாது. முதலாளித்துவத்தின் சகல பகுதியினருக்கும் எதிரான ஒரு சோசலிச பதிலீட்டைச் சூழ தொழிலாளர்களை அணிதிரட்டவும் அவர்களுக்கு கல்வியூட்டவும் அடுத்து வரும் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடும்.

பொன்சேகாவின் பிரவேசமானது, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு பரந்த உட்பொருளைக் கொண்டுள்ளது. இலங்கையில் அபிவிருத்தியடைந்து வரும் நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் சகல அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகள், முன்னேறிய தொழிற்துறை நாடுகள் உட்பட உலகம் பூராவும் குறைந்த அல்லது அதிக அளவுக்கு அடிநிலையில் இடம்பெறுகின்றன. மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகள், ஆழமடைந்துவரும் சமூக துருவப்படுத்தல், தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் இருந்து மக்கள் தனிமைப்படுதல், பாராளுமன்ற அரசியலின் சீரழிவு மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகள் மேலும் மேலும் பயன்படுத்தப்படுவதும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என சொல்லப்படுவனவற்றில் மட்டும் பிரத்தியேகமாக இடம்பெறுபவை அல்ல. கடந்த காலத்தில் போலவே, இந்த சிறிய தீவில் இடம்பெறும் நிகழ்வுகள், தொழிலாள வர்க்கத்துக்கு சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நிலைமைகள் பற்றிய எச்சரிக்கையாகும்.

நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

Permanent Revolution and the National Question Today
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்
By David North

மொன்றியாலில் பெப்ரவரி 3,1993 இல் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரான டேவிட் நோர்த் பின்வரும் சொற்பொழிவை நிகழ்த்தினார். இச் சொற்பொழிவு (அப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்று அழைக்கப்பட்ட) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் நீண்ட காலத் தலைவராக இருந்துவந்த கீர்த்தி பாலசூரியாவின் வாழ்வை மற்றும் அவரின் அரசியல் பங்களிப்பை நினைவு கூருவதற்காக ஆற்றப் பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரியா அவரது முப்பத்தி ஒன்பதாவது வயதில், டிசம்பர் 18, 1987 இல் மாரடைப்பால் அகால மரணத்துக்கு ஆளானார்.

தோழர் கீர்த்தி பாலசூரிய மரணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்து சென்று விட்டன என்று நம்புவது கடினமாக உள்ளது. அவர் உயிருடன் இன்று இருப்பாராயின், அவர் தனது நாற்பத்தி நான்காவது பிறந்தநாளைத் தாண்டி ஒரு சில மாதங்கள்தான் சென்றிருக்கக் கூடிய ஒரு தோழரின் வாழ்வையே நாம் இன்று எல்லாவற்றிக்கும் முதலாக நினைவு கூருகின்றோம். கீர்த்தி, அவரின் வயதைக்காட்டிலும் இளமையாய் இருந்தார். அவருக்கு அளப்பரிய அறிவு மற்றும் அரசியல் அனுபவம் என்பன இருந்த பொழுதும், அவரின் ஆர்வம் மற்றும் நகைச்சுவை என்பன ஒரு பையனின் பாங்கை கொண்டிருந்தன. என்றாலும் அவரைப் பொறுத்தவரை முதிர்ச்சியின்மையோ அல்லது அக்கறையின்மையோ அடியோடு இருந்ததில்லை. அவர் ஊடுருவிச் செல்லும் ஆழ்ந்த அறிவுத்திறம் படைத்த மனிதர். அவரின் அரசியல் பற்றுறுதி பல்லாண்டுகாலமாக நெறிமுறைப்படுத்தப்பட்ட படிப்பின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டு மற்றும் பலம் சேர்க்கப் பட்டதாக இருந்தது.

நான் கீர்த்தியை முதலில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (W.R.P) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தினால் (Socialist Labour League) இங்கிலாந்தில் 1972 கோடைக்காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலையில் சந்தித்தேன். அவர் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய ஒரு விரிவுரைத் தொடரில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அவர் கருச்சிதைவுற்ற 1923ம் ஆண்டு ஜேர்மன் புரட்சிபற்றி ஒரு நீண்ட பங்களிப்புச் செய்ததை என்னால் இன்னமும் நினைவு கூரமுடியும். கீர்த்தி இப்பாடசாலையில் சிங்களத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால் முழுச் சபையினரும் அவரின் உணர்ச்சிமிக்க பேச்சினால் வசீகரிக்கப்பட்டிருந்தனர். வார்த்தைகள் அக்கினிக் குழம்பாக அவரிடமிருந்து பெருக்கெடுத்தன. அவரின் மொழிபெயர்ப்பாளர்- தோழர் விஜே டயஸ் என்று நான் நினைக்கின்றேன்- பெரும் முயற்சி எடுத்த பொழுதும், அவரால் கீர்த்தியின் பெருக்கெடுக்கும் பேச்சுடன் ஈடு கொடுக்க முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தனது மொழிபெயர்ப்பாளர் ஒன்றில் பல வசனங்களை விட்டுவிட்டு தடுமாறுகின்றார் அல்லது ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை வேண்டியளவு சரி நுட்பத்துடன் எடுத்துக்கூறத் தவறிவிட்டார் எனக் கீர்த்தி உணர்ந்ததும், அவர் திடீரென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துத் தனது கருத்தினை தம்மால் முடிந்தமட்டும் எடுத்து முன்வைக்க முற்படுவார்.

அப்பொழுது கீர்த்தி ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் அன்றைய (விரைவில் வங்காள தேசமாக மாற இருந்த) கிழக்குப் பாகிஸ்தான் மீது நடந்த இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பாக சோசலிச தொழிலாளர் கழகம் கடைப்பிடித்த அரசியல் நிலைப்பாட்டை உக்கிரமாக எதிர்த்திருந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்பினை சோசலிச தொழிலாளர் கழகம் அங்கீகரித்ததை எதிர்த்துக் கீர்த்தி 1971 டிசம்பரிலும், மற்றும் 1972 ஜனவரியிலும் எழுதிய கடிதங்களை அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகள் மேலுமொரு பதினான்கு ஆண்டுகளுக்கு- தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுவரை- பார்க்கக் கிடைக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு பின்னரே கீர்த்தியுடன் விரிவாகப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நாம் இருவரும் 1975 மே மாதத்தில் லண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் ஆறாவது அகல் பேரவையில் (Congress) கலந்துகொண்டோம். அந்த அகல் பேரவை, ரிம் வொல்ஃபோர்த், வேர்க்கஸ் லீக்கில் இருந்து விட்டோடிய பின்னர் நடந்தது. கீர்த்திக்கு வொல்ஃபோர்த்தை தெரிந்திருந்ததால் அவர் வேர்க்கஸ் லீக்கினுள் வெடித்த நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்திருந்த அரசியற் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிதீவிர அக்கறை காட்டினார். உண்மையில் கீர்த்தி ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது அகல் பேரவையில் வொல்ஃபோர்த்தைக் கடைசியாக பார்த்திருந்தார். அந்த அகல் பேரவையில், வொல்ஃபோர்த்தின் அறிக்கை, கவலையுடன் கவனிக்க வேண்டியளவு இழப்புக்களை --பெரும் எண்ணிக்கையில் முன்னணி உறுப்பினர்களின் இராஜினாமாக்கள் உட்பட-- வேர்க்கஸ் லீக் கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத் தகவல் கீர்த்தியை கவலைப்படச் செய்தது. வேர்க்கஸ் லீக்கினுள் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கான திட்டவட்டமான அரசியல் விளக்கத்தினை வொல்ஃபோர்த்தினிடம் இருந்து பெறக் கீர்த்தி முயற்சித்தார். இருந்தபொழுதும், கீர்த்தி வொல்ஃபோர்த்தை கேள்வி கேட்க எடுத்த முயற்சி ஹீலி மற்றும் பண்டாவின் குறுக்கீட்டால் துண்டிக்கப்பட்டது. அவர்கள் இளைஞர்களிடையே ''பரந்தளவில் உறுப்பினர் திரட்டும்'' வொல்ஃபோர்த்தின் அறிக்கைகளால் கவரப்பட்டிருந்தார்களேயன்றி, பெறுமதி மிக்க மற்றும் அனுபவம் நிறைந்த உறுப்பினர்களின் இழப்புகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

அடுத்த பத்து ஆண்டுகளில் நான் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே கீர்த்தியை பார்க்க முடிந்ததோடு, பொதுவில் அவை அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள முடியாத நிலமைகளின் கீழேதான் ஏற்பட்டன. அக்டோபர் 1985 வந்த பின்னரே நாம் இறுதியில் நெருக்கமாக மற்றும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் இணைந்து தொழிற்பட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் நெருக்கடி வெடித்தது. அக்டோபர் மூன்றாம் வாரத்தின் முடிவில் கீர்த்தி லண்டன் வந்தடைந்தார். நான் தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) மற்றும் நான்காம் அகிலம் ஆகியவற்றுள்ளான நிலைமைகளை வேர்க்கஸ் லீக்குக்கு மீள் அறிக்கை (Report back) சமர்ப்பிக்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குத் திரும்பினேன். எனக்கு நல்ல ஞாபகம் உண்டு அக்டோபர் 20 காலையில் யாரிடமிருந்தல்ல -மைக் பண்டாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பண்டா, கீர்த்தி லண்டனுக்கு வந்துவிட்டதாகவும் - உண்மையில் கீர்த்தி தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கட்சி வளவில் (Premises) இருப்பதாகவும் என்னிடம் கூறினார். பண்டாவுடன் தொலைபேசி பேச்சு முடிந்த மறுகணமே நான் மற்றொரு தொடுவையில் (Line) தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கீர்த்தியுடன் பேச விரும்புவதாக வேண்டினேன். தொலைபேசியில் அவர் வந்ததும் அவரின் முதல் வார்த்தை; ''தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் போக்குப் பற்றிய உங்களது விமர்சனங்களை நான் வாசித்தேன், நான் அவற்றுடன் உடன்படுகின்றேன்''. இந்த அணுகுமுறை தோழர் கீர்த்தியின் தனிச்சிறப்பியல்பாகும். அவர் எப்பொழுதும் அரசியல் ரீதியில் விவாதத்துக்கு உட்பட்டுள்ள விடயங்களுடன்தான் ஆரம்பிப்பார். அவர் லண்டனை வந்தடைந்த பின், முந்தைய நாளில் பண்டா கீர்த்திக்கு, ஹீலியின் ''பாலுறவு ஊழல்" பற்றிய காம விபரங்கள் பற்றிப் பேசி மகிழ்விக்க முயன்றார். இறுதியில் பண்டா மூச்செடுக்க தனது பேச்சை நிறுத்தியதும், கீர்த்தி சாதாரணமாக அவரைப் பார்த்து, ''ஜெரி ஹீலியுடனான உங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்ன?'', எனக் கேட்டார். இக் கேள்வி, பண்டாவை அதிர்ச்சியுறச் செய்தது.

கூறுவதற்கு அவருக்கு எதுவுமே இருக்கவில்லை. ஒரு கணிசமான அளவு அரசியல் தள்ளாட்டத்தின் பின்னர், இந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளியேற வழியைத் தேடிய பண்டா, நான் 1982 மற்றும் 1984க்கும் இடையில் எழுதிய அரசியல் பத்திரங்களின் பிரதிகளை கீர்த்தியிடம் கையளித்தார்.

ஆனால் இப் பத்திரங்கள் பண்டாவுக்கு எவ்வித முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவை அவருக்கு உடனடியாகத் தரக் கூடிய பயன்பாடு மற்றும் அவரின் உட்கட்சி கோஷ்டியின் கோஷ்டிப் போராட்ட தேவைகளுக்கான பயன்பாடுகள் என்பனவற்றைத் தாண்டி அவற்றின் பெறுமதி செல்லவில்லை. ஆனால் கீர்த்திக்கோ அவை இன்றியமையா முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஏனென்றால், உண்மையில் ஒரு தசாப்த காலத்துக்கு அதிகமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவினுள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் / தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் வளர்ச்சியுற்று வந்த சந்தர்ப்பவாதம் பற்றிப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1972ம் ஆண்டு முன்வைத்த விமர்சனங்களை, அப்பொழுது அனைத்துலகக் குழுவின் உள்ளே எவரும் அறிந்திருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோரின் நேர்மையற்ற மற்றும் சீர்குலைக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்தது. அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளின் கண்களின் முன், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை அபகீர்த்தியடையச் செய்யும் நோக்குடன் தொழிலாளர் புரட்சிக் கட்சி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆற்றிவந்த பணிகளைப் பற்றி பொய்யான அறிக்கைகளை புனைந்து வந்தது. இத்தாக்குதல்களின் நோக்கம் கீர்த்தியும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை சேர்ந்த அவரது தோழர்களும், நான்காம் அகிலத்தினால் வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்காக உணர்வுபூர்வமாக தம்மை அர்ப்பணித்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினூடு தொடுத்து வந்த போராட்டத்தை கீழறுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. கீர்த்தி, நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கட்சியின் தலைவராகவும் அதன் மிகப்பெரிய பாரம்பரியங்களின் பெருமைமிக்க பிரதிநிதியாகவும் விளங்கினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் கீர்த்திக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சி உருவாக்கிய பயங்கரமான அனைத்துக் கஷ்டங்கள் மத்தியிலும், 1985ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வெடித்த அரசியல் நெருக்கடிக்கு கீர்த்தியின் பிரதிபலிப்புகளில் அகநிலைவாதத்தின் அல்லது மனக் கசப்பின் அறிகுறி கூடத் தென்படவில்லை. மாறாக அவர், இந் நெருக்கடியில் அனைத்துலகக் குழுவினை ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் கொண்டு மீண்டும் ஆயுதபாணியாக்க ஒரு சந்தர்ப்பத்தை கண்டதோடு, பல வருடங்களாக நான்காம் அகிலத்தை பலவீனமடையச் செய்துவந்த சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக உலகம் பரந்த அளவில் ஒரு எதிர் தாக்குதலை தொடுப்பதற்கான ஒரு வாய்ப்பையும் கண்டார்.

1985 அக்டோபர் மற்றும் 1987 டிசம்பர் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதி, அரசியல் ரீதியில் கீர்த்தியின் வாழ்க்கையில் மிகவும் பலன் தந்த மற்றும் மிகவும் மகிழ்ச்சிமிக்க காலப் பகுதியாக அமைந்தது என்று என்னால் துணிவுடன் கூறமுடியும். அவர் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மறுமலர்ச்சியில் ஈடு செய்ய முடியாத மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார்.

1987 டிசம்பர் 23ல் நடைபெற்ற தோழர் கீர்த்தியின் மரணச்சடங்கில், நான் புரட்சிகரத் தொழிலாளர்களது மற்றும் இளைஞர்களது வரும் தலைமுறையினர், மாவோ சேதுங்கிடமிருந்தோ அல்லது ஹோ சி மிங்கிடம் இருந்தோ அல்லது ஃபிடேல் காஸ்ட்ரோவிடம் இருந்தோ, அல்லது தாம் மார்க்சிஸ்டுக்கள் என்று வேடம் போட்டு உலா வரும் முதலாளித்துவ தேசியவாதத்தின் மற்றும் குட்டி முதலாளித்துவ மிதவாதத்தின் எந்த ஒரு பிரதிநிதியிடம் இருந்தோ தமது உள் ஊக்கத்தை பெறப்போவதில்லை எனக் கூறினேன். இதற்கு மாறாக எதிர்காலத்தின் புரட்சிகரப் போராளிகள், கீர்த்தி பாலசூரியாவின் அரசியல் முன் உதாரணத்தில் இருந்தே கற்றுக்கொள்ளவார்கள் என்றேன். கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள், இப்புகழுரையில் மிகைப்படுத்தலின் அறிகுறிகூட அடியோடு இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. அரசியல் ஏய்ப்பு மற்றும் தத்துவார்த்த பாசங்கை தமது அரசயல் வாழ்வின் அடித்தளமாக கொண்டிருந்த ஸ்ராலினிசத்தின் புகழ்மிக்க மாபெரும் மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் புகழ்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் ஈவிரக்கமற்று அடி கொடுத்துள்ளன. ஆனால் இந்நிகழ்வுகள் மார்க்சிசத்தின் வரலாற்று முன்னோக்கின் மற்றும் அது அதன் அடிப்படையாக கொண்டிருக்கும் அறிவியல் விதிமுறையின் சக்தியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.

கீர்த்தியின் அரசியல் வாழ்வின் வீச்சளவு ஏறக்குறைய இருபது வருடங்களிலும் அதிகமாக இருந்தது. இந்த வருடங்கள் அனைத்தும் புரட்சிகர மார்க்சிசத்தின் நிஜ மரபுகளைக் கட்டிக் காப்பதற்காக அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. இருந்தபொழுதும், மார்க்சிசத்தை பாதுகாக்கும் இப் போராட்டத்தை, அனைத்துலகத் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வாழ்வு அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மிகவும் கோர வடிவங்களின் மேலாண்மைக்கு உள்ளாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் அவர் நடத்த வேண்டி இருந்தமை, அவரது விதியாக இருந்தது. இச்சந்தர்ப்பவாதம் மிகப் பிரமாண்டமான ஜட ரீதியான வளங்களை தன்வசம் வைத்திருந்தது. ஆனால் இந்த வளங்களால் அதனை அதன் சொந்த அரசியல், சித்தாந்த மற்றும் ஒழுக்ககியல் திவாலின் தவிர்க்க முடியா விளைவுகளில் இருந்து என்றென்றைக்குமாக பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த காலத்திய பாசாங்குப் புனைக்கதைகள் யாவும் அம்பலமாக்கப்பட்டு வருகின்றன. மாவோக்கள், ஹொக்ஸ்ஸாக்கள், டீட்டோக்கள், காஸ்ட்ரோக்கள் மற்றும் இரண்டாம் உலகயுத்தத்தின் பிந்தைய சகாப்தத்தில் புரட்சியாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள் அனைவரும் அரசியல் மோசடிக்காரர்கள் மற்றும் தத்துவார்த்த போலிகள் என்றே நினைவு கூரப்படுவர். அவர்களின் சாதனைகள் எனக் கூறப்படுபவை அனைத்தும் இற்றுப் போன அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டவையாகும். அவர்கள் உருவாக்கிய அரசியல் கொலைக்களங்கள், ஒன்றில் அவை இடிந்து வீழ்ந்துவிட்டன அல்லது இழிவுற்ற நிலையில இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவர்களில் அநேகரைப் பொறுத்தவரை மரணம் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களின் அழிவுகரமான விளைபயன்களில் இருந்து அவர்கள் தப்பிச் செல்ல அவர்களுக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. இவற்றிற்கான விலையை செலுத்த தொழிலாள வர்க்கமே விடப்பட்டுள்ளது. ஸ்ராலினிசத்துடனான அவரது சிடுமூஞ்சித்தனமான பேரம் பேசல்களின் பெறுபேறுகளை நேரடியாக காண, காஸ்ட்ரோ மட்டுமே போதுமான அளவு நீண்டகாலத்திற்கு உயிர் வாழ்ந்துள்ளதாக தோன்றுகின்றது. அவர்களின் தனிப்பட்ட ரீதியான கதிகள் எப்படியாக இருந்த பொழுதும், இந்தப் போலி ஹீரோக்கள் - இவர்களுடன் மேலும் அநேகரைச் சேர்க்க முடியும் - இவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றைப் பொதுவாகக் கொண்டிருந்தனர். அதுதான், இவர்களில் ஒருவர்கூட அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் மேம்பாட்டிற்கு அரசியல் ரீதியில் நிலையான பெறுமதியுள்ள பங்களிப்பு ஒன்றைக் கூட செய்திருக்கவில்லை. மாறாக இவர்கள் அதை சுரண்டினர், தவறான வழியில் அதை வழிநடத்தினர் மற்றும் அதைக் காட்டிக் கொடுத்தனர்.

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மூலம்

மறுபுறம், லெனின், ட்ரொட்ஸ்கி, லக்சம்பேர்க் ஆகியோர் கற்பித்த புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் பள்ளியின் தலைசிறந்த பிரதிநிதிகளில் ஒருவராகக் கீர்த்தி நினைவுகூரப்படுவார். அவர் போராடி வெற்றி கொள்ள முயன்ற பிரச்சினைகள் ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சிகர மூலோபாயத்தின் மிகவும் அத்தியாவசியமான பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

கீர்த்தியின் வாழ்வின் தனிச் சிறப்பை மற்றும் அவர் போராடிய மூலக் கோட்பாடுகள் மற்றும் முன்னோக்குகள் என்பன இன்றைய காலப்பகுதியில் கொண்டுள்ள தீர்க்கமான முக்கியத்துவத்தை சரியாக மதிப்பீடு செய்ய, அவரின் சொந்த அரசியல் அபிவிருத்தி வேரூன்றியிருந்த இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் போராட்டங்களை மீளாய்வு செய்தல் அவசியமாகும். எனவே ரஷ்ய மார்க்சிஸ்டுகள் தாம் தயார் செய்துகொண்டிருந்த புரட்சி பற்றிய பல்வேறு கருத்துருக்களை விவாதித்துக்கொண்டிருந்த ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு, இந்நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்கு நாம் பின் செல்லவேண்டும்.
ரஷ்யா இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்றைய முக்கிய முதலாளித்துவ வல்லரசுகளுள் அதி குறைந்த அபிவிருத்தியை அடைந்ததாக இருந்தது. அதன் அமைப்பு, பிற்போக்கு மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிய மன்னரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதன் அரசியல் அமைப்பு ஒரு அரைநிலமானித்துவ பண்பினைக் கொண்டிருந்தது. மக்கட்தொகையில் மிகப் பெருப்பான்மையினர் விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் வறுமையின் படுபாதாளத்தில் மற்றும் அறியாமையிலும் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்திலேயே புதிய மற்றும் துரித தொழிற்துறை வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு கணிசமான அளவு தொழிலாள வர்க்கம் அங்கு தோன்றியிருந்தது. ஆனால் ரஷ்ய மக்கட்த்தொகையில் அதன் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறிப்பிட்டளவு சிறியதாக மற்றும் ஒரு சில நகர மையங்களில் செறிந்தும் இருந்தது.

இந்நூற்றாண்டின் திருப்பத்தில் எதிர்வரும் புரட்சியின் முக்கிய பணி, ஒரு ஜனநாயக பண்பைக் கொண்டிருக்கும் என்று ரஷ்யாவில் உள்ள மார்க்சிஸ்டுக்கள் உடன்பட்டிருந்தனர். அதாவது அது அரைநிலமானித்துவ அரச அமைப்பை அடித்துச் செல்வதோடு நாட்டுப்புறத்தில் நிலமானித்துவ உறவுகளின் மிச்சமீதங்களாக எஞ்சியிருப்பவை அனைத்தையும் அழித்துவிடும் என்று உடன்பட்டிருந்தனர். ரஷ்ய பிரபுத்துவத்தின் பெரும் நிலச் சொத்துடமைகள் உடைக்கப்பட்டு, நிலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

அதன் வரலாற்றுப் பணியின் நோக்கு நிலையில் இருந்து ஆய்வு செய்யப்படுமிடத்து, ரஷ்ய மார்க்சிஸ்டுக்களால் எதிர்பார்க்கப்பட்ட புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி என்று வரைவிலக்கணம் செய்யப்பட்டது. இருந்தபொழுதும் ஜனநாயக புரட்சியை அடைவதில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான அரசியல் உறவு சம்பந்தமாக மற்றும் எந்த அரசியல் மற்றும் அரச வடிவங்களினூடு ஜனநாயகப் புரட்சி அடையப்படும் என்பது பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றின.

ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான ஜோர்ஜி வீ.பிளக்கானோவ், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாபெரும் ஜனநாயகப் புரட்சிகளின் அடிப்படையில், அவை மேற்கு ஐரோப்பாவில் மற்றும் வட அமெரிக்காவில் உருவாக்கிய முன்னோடி முன்மாதிரிகள் போல ரஷ்ய புரட்சியும் ஒரு ஜனநாயகக் குடியரசையேயன்றி அதிலும் அதிகமாக எதையும் உருவாக்க முயல முடியாது என்ற நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வகித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முக்கியமாக 1789 - 1794ம் ஆண்டுகளினது பிரெஞ்சுப் புரட்சியின் பெறுபேறுகளை ஒத்த விளைபயன்களை ரஷ்யப் புரட்சி உருவாக்கும் என்று அவர் காரணம் கூறி வாதிட்டார். சர்வாதிகாரத்தை, ரஷ்ய புரட்சி தூக்கி வீசும் பொழுது, அது அரசியல் அதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்குச் சேர்க்கும். அதையடுத்து முதலாளித்துவ ஆட்சியின் ஏறத்தாழ நீண்டதாக உள்ள காலப்பகுதி ஒன்று பின்தொடரும். அக்காலப்பகுதியினுள் தொழிலாள வர்க்கமானது எதிர்காலத்தில் சோசலிசத்தை கைகூடச் செய்ய ஒரு தாராண்மைத் தன்மையிலான ஜனநாயகக் கட்டமைப்பினுள் அது அரசியல் போராட்டத்தில் கல்வியூட்டப்படும். அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் பார்க்குமிடத்து, பிளக்கானோவின் போக்குவழியின் (Line) பொருள், தொழிலாள வர்க்கத்தின் கட்சி எதிர்வரும் புரட்சிக்கு தலைமை கொடுக்க முயல முடியாது என்பதாகும். மாறாக அது, புரட்சியின் தலைமைப் பாத்திரத்தை முதலாளித்தவ வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்துக்கான அவர்களது உரிமை கொண்டாடலை ஏற்றுக் கொள்வதோடு, ரஷ்ய சமூக ஜனநாயகமானது முதலாளித்துவ கட்சிகளின் விசுவாசமான நண்பனாகச் செயற்பட வேண்டும்.

இங்குதான் ஒரு காலத்தில் பிளக்கானோவின் விசுவாசமான மாணவனாக விளங்கிய லெனின் தனது குருவிடமிருந்து பிரிந்தார். லெனின், ரஷ்ய புரட்சியானது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்ற வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் வர்க்க இயக்கவியல் (Dynamics) பற்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்துருவை முன்வைத்தார். பிளக்கானோவ் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மேலாண்மையை ஆராயாமலே முன்கூட்டியே ஏற்றுக் கொண்டார். ஆனால் லெனின் இந்த வர்க்கமானது ரஷ்யாவை நிலமானித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக மிச்ச மீதங்கள் அனைத்தையும் துடைத்துக்கட்ட அவசியப்படும் போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல இயலாதது, ஏனென்றால் அது அளவுக்கு அதிகமாக பழமையை பாதுகாக்கும், மிக அதிகமாக சமரசம் செய்ய நாட்டம் கொண்டதாக மற்றும் பரந்த மக்களைக் கண்டு அளவுக்கு மிஞ்சி அச்சம் கொண்டுள்ளதாக உள்ளது என்று வாதிட்டார். பிளக்கானோவ் தொழிலாள வர்க்கத்துக்கும் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இதற்கு எதிராக லெனின் பாட்டாளி வர்க்கத்திற்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இக்கூட்டின் இலக்கு இவ்விரு வர்க்கங்களினதும் தலைமையின் கீழ் ஒரு "ஜனநாயக சர்வாதிகாரத்தை" அடைவது என்று லெனின் வாதிட்டார்.

லெனினின் சூத்திரம் நிச்சயமாகப் பிளக்கானோவின் சூத்திரத்திலும் பார்க்க அதிகம் தீவிரமானது. மற்றும் அதன் தந்திர உபாயத்தின் போக்குவழி முற்று முழுதாக வேறுபட்டதாக விளங்கியது. பிளக்கானோவ், ஜனநாயகப் புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையை வலியுறுத்தினார். அவர் தொழிலாள வர்க்கம் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துடனான அதன் அரசியல் கூட்டின் நலனுக்காக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பிற்போக்கு முகாமினுள் தள்ளிவிடக் கூடிய எந்த அதிதீவிர நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார். லெனின், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கக் கட்சிகளின் மற்றும் அவற்றின் தவிர்க்கமுடியா ஈடாட்டங்களில் இருந்தும் முற்று முழுதாக சுயாதீனமாக தனது போராட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கம் விவசாயிகளின் அதி தீவிரமான பகுதிகளுடன் கூட்டமைத்து, விவசாயத்தின் பண்டை உறவுகளின் கவிழ்ப்பை எல்லை வரம்புவரை தள்ளுவதோடு, பழைய ஸாரிச அரச இயந்திரத்துடனான கணக்கை தயவு தாட்சணியம் இன்றி முடித்துக் கட்டுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

இருந்தபொழுதும், லெனனின் அரசியல் முன்னோக்கில் பொருத்தமின்மை ஒன்று இருந்தது. தொழிலாள வர்க்கத்துக்கு எந்ந ஒரு சுயாதீனமான பங்கை மறுத்த பிளக்கானோவின் ஒத்துப் போகும் போக்குவழியில் இருந்து அது துல்லியமாக விலகிச் சென்ற பொழுதும், லெனினின் முன்னோக்கு, முதலாளித்துவ சொத்துடமையினுள் புரட்சி உள்ளேறிச் செல்வதை முன்காணவில்லை. அதோடு இரு வர்க்கங்களின் "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற கருத்துரு, உள்ளியல்பாகவே துல்லியமற்றதாக இருந்தது.

மிகவும் தீவிரமானதும் உள்ளார்ந்த ரீதியில் பெரிதும் உறுதியானதுமான மூன்றாவது கருத்துப்பாடு ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது. உலக வரலாற்றுக் கருத்துப்பாட்டின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி ரஷ்ய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு (காலாவதியான முதலாளித்துவ அபிவிருத்தியைக் கொண்ட அனைத்து நாடுகளையும் போலவே) 1789ம் ஆண்டின் பிரான்சிய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது என வாதிட்டார். இது இனியும் தனது சொந்த 'முதலாளித்துவ' புரட்சியை செய்யும் நிலையில் இருக்கவில்லை. 1848ன் நிகழ்வுகள், ஜனநாயகப் புரட்சியின் பணி தொடர்பான முதலாளி வர்க்கத்தின் மனோபாவம், எல்லாவற்றிற்கும் மேலாக அது வாழ்ந்த சமுதாயத்தின் வர்க்க சக்தியால் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டின. தொழிலாள வர்க்கத்தின் பெருக்கம் முதலாளி வர்க்கத்துக்கு ஸார் எதேச்சாதிகாரத்தினை காட்டிலும் பெரும் ஆபத்தை தோற்றுவித்தது. மேலும் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் பாத்திரத்தினை வகிக்க இலாயக்கற்றவர்களாக விளங்கினர். அதன் அரசியல் பாத்திரம் எவ்வளவுதான் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தபோதிலும் அதனால் இன்னொரு வர்க்கத்தின் முன்னோக்கின் மீது மட்டுமே செயல்பட முடியும். ஆதலால் ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கமான பாத்திரத்தினை தொழிலாள வர்க்கமே வகிக்கவேண்டியதாக இருந்தது. அத்தோடு அதனை தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவில் மட்டுமே சாதிக்கவும் முடியும். மேலும் தொழிலாள வர்க்கம் தன்னை வெறும் ஜனநாயகப் பணியுடன் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போயிற்று. அது முதலாளித்துவ சொத்தினுள் ஊடுருவ கட்டாயப்படுத்தப்படுமாதலால் ஜனநாயக புரட்சி மேலும் மேலும் அப்பட்டமான சோசலிச தன்மையை பெற்றுக்கொள்ளும்.

ரஷ்யாவில் தொழிலாள வர்க்க புரட்சி, உலகம் பூராவும் வெடிப்புமிகுந்த அதிர்வினை உருவாக்கும்; ரஷ்யாவில் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும், ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் சோசலிச நிர்மாணத்தின் சாத்தியமும் புரட்சியை அதன் எல்லைகளுக்கு அப்பால் விஸ்தரிப்பதிலேயே தங்கியுள்ளதாக ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.
உலக சோசலிச புரட்சியுடனான ரஷ்ய புரட்சியின் உறவானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் இன்றியமையாத அத்திவாரத்தினை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. அவரின் சமகாலத்தவர்கள் எவருக்கும்- லெனின் இதற்கு அப்பாற்பட்டவர் அல்ல- ஈடிணையற்ற விதத்தில் உறுதியோடும் தீர்க்க தரிசனத்தோடும் இறுதி ஆய்வுகளில் ரஷ்ய புரட்சியின் பண்பு தேசிய நிலைமைகளால் அன்றி அனைத்துலக நிலைமைகளால் நிர்ணயம் செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோசலிச பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இறங்குவதற்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பெரிதும் பின்தங்கியது எனத் தொடர்ந்து வாதிட்ட மென்ஷிவிக் மேதாவிகளுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, ரஷ்ய பொருளாதார சக்தியை அதன் அபிவிருத்தியின் தேசிய மட்டத்தில் இருந்தும் அது கொண்டுள்ள தேசிய வளங்களில் இருந்து மட்டும் ஒழுங்குமுறையாக மதிப்பீடு செய்துவிட முடியாது என்றார். ரஷ்ய அபிவிருத்தியின் நிஜ சக்தியை அது உண்மையில் நிலைகொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தினதும் அனைத்துலக அரசியல் உறவுகளினதும் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

உலக நிலைமைகளால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த ஏகாதிபத்திய பொருளாதாரங்களின் மீது சார்ந்த ஒரு அரைக்காலனித்துவ நிலைமைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய முதலாளி வர்க்கம் கடந்த காலத்தில் ஜனநாயக புரட்சிகளுடன் தொடர்புபட்டிருந்த எந்தவொரு வரலாற்று பணியினையும் தீர்த்துவைக்க இலாயக்கற்றது என்பதே ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடாக விளங்கியது.
ஜனநாயக புரட்சிக்கு தலைமை தாங்கவும், பூரணப்படுத்தவும் ரஷ்ய முதலாளி வர்க்கத்தினால் முடியாது போனமை, ட்ரொட்ஸ்கி விளக்கியது போன்று ஒரு உலக வரலாற்றுத் தோற்றப்பாட்டின் வெளிப்பாடாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய அடிப்படையில் மனித இனத்தின் எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்துவைக்க இயலாது போனமை, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் தேசிய அரசுக்கே சாவுமணி அடித்தது. உலகப் பொருளாதார சக்திகள், முதலாளித்துவம் வேரூன்றியிருந்த தேசிய அரச அமைப்பின் அரசியல் கட்டுமானத்தையும் தாண்டி வளர்ச்சி கண்டன.

ஒரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கத்துக்கு நிலமானித்துவத்தின் அதிகாரத்துவத்தினை துடைத்துக்கட்டும் அரசியல் போராட்டத்தின் தாக்கமானது இடைவிடாது ஆட்சியை கைப்பற்றுவதையும் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தினையும் நோக்கி இட்டுச் சென்றது. எவ்வாறெனினும் அது தனது சர்வாதிகாரத்தினை ஸ்தாபிதம் செய்ததும் ரஷ்ய தொழிலாள வர்க்கமோ அல்லது எந்தவொரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கமோ ஒரு புறத்தில் தேசிய பொருளாதாரத்தின் நிலையான வரையரைகளுக்கும் மறுபுறத்தில் அனைத்துலக முதலாளி வர்க்கத்தின் மிலேச்ச எதிர்ப்புக்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

ரஷ்ய ஆட்சி நீடிப்பு

ஆதலால் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும் இறுதியில் சோசலிசத்தினை நோக்கிய முன்னேற்றமும் முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் அனுதாபத்தில் மட்டுமன்றி, இறுதி ஆய்வுகளில் அவற்றின் சொந்த தேசிய முதலாளி வர்க்கத்தினை வெற்றி கொள்வதிலும் தங்கியுள்ளது. 1907க்கு முன்னரே ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதுபோல்; ''ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் நேரடி அரச ஆதரவு இல்லாமல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆட்சியில் நீடிக்க முடியாதது மட்டுமன்றி அதன் தற்காலிக சர்வாதிகாரத்தினை ஒரு சோசலிச சர்வாதிகாரமாக மாற்றவும் முடியாது.''

முதலாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, தேசிய காரணிகளுக்கு மேலாக அனைத்துலக நிலைமையின் முக்கியத்துவத்தினை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதை நிரூபித்தது. ஏகாதிபத்திய யுத்தம்- சாராம்சத்தில் காலவதியான தேசிய அரசுடன் உலக முதலாளித்துவ உற்பத்தி சக்திகளை சமாதான ரீதியில் இணக்கமுறச் செய்ய முடியாமையை சுட்டிக்காட்டியது. முன்னேறிய, பின்தங்கிய நாடுகள் இரண்டிலும் தொழிலாள வர்க்கம் ஒரு பொது முட்டுக்கட்டை நிலைக்கு முகம்கொடுத்தது. மனித சமுதாயத்தின் சகல அடிப்படைப் பிரச்சனைகளுக்குமான தீர்வினை உலகப் பொருளாதார அபிவிருத்தி மட்டத்திலும் அனைத்துலக புரட்சிகர போராட்டங்கள் ஊடாக மட்டுமே காணமுடியும்.

இந்த விஞ்ஞான கருத்துப்பாடு சகல அரசியல் பிரச்சனைகளதும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டின் அடிப்படையாக உள்ளது. லெனினைப் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவர் அங்கீகரித்த அதேவேளையில், இந்த ஜனநாயக வேலைத்திட்டத்தின் இம் மூலகத்துக்கான ட்ரொட்ஸ்கியின் ஆதரவு ஆழமான விமர்சன பண்பினை கொண்டிருந்தது. ஒரு பெரிய அரசுடன் சிறிய தேசியங்களை பலாத்காரமாக ஒன்றிணைப்பதை அவர் வன்மையாக எதிர்த்த போதிலும் ட்ரொட்ஸ்கி- 1915ல் எழுதியது போன்று- சமூகஜனநாயகம் ''வரலாற்றுக்கு மேலாக நின்று தேசியக் கொள்கையை ஏதோ ஒரு வகையான முழுமுதல் கருத்தாக மாற்றிவிடாது'' என வலியுறுத்தினார்.

''தேசியமும் பொருளாதாரமும் அரசுடனும் ஒன்றுடன் மற்றொன்றும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. அரசு, பொருளாதாரத்துக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. இதை விரிவுபடுத்த முயல்வது தேசியத்தினை நசுக்குகின்றது. ''நிலத்தின் மேற்பரப்பில் பொருளாதாரம் அதன் சக்திகளின் இயற்கையான இயக்கத்தினையும் வளங்களையும் தேசிய இனக்குழுக்களின் பங்கீட்டுக்கு கீழ்ப்படுத்த மறுக்கின்றது.''
நிரந்தரப் புரட்சியும் கம்யூனிச அகிலமும்
அக்டோபர் புரட்சியைப்போல் உலக மக்களின் நனவில் பிரமாண்டமான அதிர்ச்சி மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய வேறு சம்பவம் வரலாற்றில் கிடையாது. உலகின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கினையும் இருபதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களையும் தேசிய இனங்களையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பில் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியமையானது ஒன்றில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு வகையான திரைமறைவில் ஏகாதிபத்திய சக்திகளால் ஆளப்பட்ட உலகின் பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பொதுஜன இயக்கத்துக்கு ஒரு பிரமாண்டமான உத்வேகத்தை வழங்கியது.

அக்டோபர் புரட்சி அறநெறி ஊக்கத்தினை மட்டுமன்றி- ஆபிரிக்கா, மத்திய கிழக்கு சிறப்பாக ஆசியா- அங்கு ஏகாதிபத்திய ஆளுமைக்கு எதிரான ஒரு இராட்சத வடிவம் எடுக்கத் தொடங்கியிருந்தது போன்ற- பின்தங்கிய நாடுகளின் வெகுஜனங்களுக்கு ஆழமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினையையும் வழங்கியது. என்ன விதிமுறைகள் ஊடாக, என்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காலனித்துவ நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவர்? என்ற தீர்க்கமான கேள்விகளுக்கு அக்டோபர் புரட்சி நடைமுறைப் பதில்களை வழங்கியிருந்தது. ரஷ்யாவை போன்று ஆசியாவின் பின்தங்கிய நாடுகளில் மிகவும் முக்கியமானவை பற்றி பேசுமிடத்து சீன- இந்திய வெகுஜனங்கள் எதிர்கொண்ட பணிகள் முக்கியமாக ஒரு ஜனநாயக பண்பை கொண்டிருந்தன; காலனித்துவ அடக்குமுறையில் இருந்து விடுதலை, தேசிய இணைப்பு, விவசாயிகளின் மீதான நிலமானித்துவ உறவுகளின் அடிமைத் தளையை அகற்றுதல். ஒரு வழக்காறான அரசியல் வரைவிலக்கணத்தின் நிலைப்பாட்டின்படி சீனாவும், இந்தியாவும் எதிர்நோக்கும் பணிகள் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளினால் ''தீர்க்கப்பட்ட'' வையாக விளங்கின. ஆனால் மென்ஷிவிசத்தின் அரசியல் தர்க்கத்தின்படி இந்தியாவிலும் சீனாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் தலைமை தேசிய முதலாளி வர்க்கத்துக்கு உரியதோடு அதன் இலக்குகள் ஒரு சுதந்திர முதலாளித்துவ குடியரசு வடிவிலேயே அடையப்பட முடியும்.

ஆனால் ரஷ்யாவில் மென்ஷிவிசம் தவறானதென நிரூபித்த அதே வரலாற்று முரண்பாடுகள் இந்தியாவிலும் சீனாவிலும் நிலவின. தேசிய இயக்கத்தின் முதலாளித்துவ தலைமைகள் துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் ஒரு தொழிலாளர் இயக்கத்தினை எதிர்நோக்கியது. அதன் சமூகப் போராட்டங்கள் முதலாளித்துவ தலைமையின் முக்கிய பொருளாதார நலன்களை அச்சுறுத்தியது. மேலும் முதலாளி வர்க்கத்தின் தலைமையில் (முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர தலைமையை வழங்க இலாயக்கானது என்பதை ஏற்றுக்கொள்ள ஒருவர் தயாராக இருப்பினும்) ஒரு தேசிய புரட்சியின் அடிப்படையில் இந்த ஒடுக்கப்படும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது முடியாத காரியமாக இருந்தது. ஆதலால் நிரந்தரப் புரட்சி தத்துவம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்துக்கு விளங்கியதை காட்டிலும் எழுச்சி கண்டுவரும் ஆசிய தொழிலாள வர்க்கத்துக்கு பெரிதும் பொருத்தமானதாக விளங்கியது.

1919-1922க்கும் இடையிலான கம்யூனிச அகிலத்தின் பத்திரங்கள் காலனித்துவ பிரச்சினை பற்றியதாய் விளங்கின. குறிப்பாக இரண்டாம், நான்காம் அகல்பேரவைகள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே விவரிக்கப்பட்டன. பின்தங்கிய நாடுகளின் வேறுபட்ட பொருளாதார, தொழிற்துறை அபிவிருத்தியின் அளவுகளையும், தொழிலாள வர்க்கத்தின் தொடர்ந்து வரும் பலத்தினையும் கணக்கில் எடுத்த அதே வேளையில் கம்யூனிச அகிலத்தின் இந்தப் பிரேரணை தொழிலாளர் இயக்கம் கருவடிவில் இருந்தாலும் கூட தேசிய முதலாளி வர்க்கத்தின் கட்சிகள், அமைப்புக்களில் இருந்து அரசியல் சுயாதீனமாக இருப்பதை வலியுறுத்தியது.

லெனினுக்கு பின் மூன்றாம் அகிலம்

லெனினின் மரணத்தின் பின்னர் கம்யூனிச அகிலத்தின் தகவமைவு தீவிரமாக மாற்றம் கண்டது. 1926ல் ஸ்ராலின், புக்காரினின் ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாடு திரையரங்குக்கு வந்தமை சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தினை கைவிடவும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சொந்தச் சட நலன்களுக்கு அனைத்துலக தொழிலாளர் இயக்கத்தினை கீழ்ப்படுத்தவும் சித்தாந்த அடிப்படையை வழங்கியது.

மார்க்சிசத்தின் இந்த அடிப்படை திருத்தலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியும் இடது எதிப்பும் நடாத்திய அரசியல் போராட்டத்தினையும் அல்லது இந்த தத்துவம் சோவியத் யூனியனுக்கும் உண்மையில் அனைத்துலக தொழிலாள வர்க்கத்துக்கும் ஏற்படுத்திய துக்ககரமான விளைவுகளை விரிவாக ஆராய்வது இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நாம் தோழர் கீர்த்தியின் அரசியல் பயிற்சிக்கு அவற்றின் துன்பகரமான படிப்பினைகள் ஒரு அடிப்படையான பாத்திரத்தினை வகித்துள்ளதால் சுருக்கமாகவேனும் சீனச் சம்பவங்களை ஆராய்வோம்.

நடைமுறை அர்த்தத்தில் ஸ்ராலின் சியாங் கேய் சேக்குடனும் முதலாளித்துவ கோமின்டாங் உடனும் கொண்டிருந்த உறவுகள் -இதற்கு சீனத் தொழிலாள வர்க்கம் ஒரு பயங்கரமான விலைகொடுக்க நேரிட்டது- சந்தர்ப்பவாத ஈடுபாட்டில் இருந்தே பெருக்கெடுத்தன. இவை ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாட்டை விபரிக்கத் தூண்டின.

இத் தத்துவத்தின்படி சோவியத் யூனியனில் சோசலிச நிர்மாணம், முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, சோவியத் யூனியனில் சோசலிசத்தினை அதன் சொந்த உள்ளார்ந்த வளங்களின் அடிப்படையில் யதார்த்தமாக்கிவிட முடியும். எவ்வாறெனினும் ஸ்ராலின் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை யதார்த்தமாக்குவதில் கம்யூனிச அகிலத்தின் முக்கியத்துவத்தினையும் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தில் அதன் செல்வாக்கினையும் ஒரேயடியாக தட்டிக்கழித்து விடவில்லை. ஏகாதிபத்தியம் ஒரு இராணுவத் தாக்குதலில் ஈடுபடாதிருந்தால் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை நிர்மாணித்துவிட முடியும் என்பதே கிரெம்ளின் நிலைப்பாடாக விளங்கியது.
இந்த விதத்தில் கம்யூனிச அகிலம் ஒன்றில் முதலாளித்துவ ஆட்சியாளருடன் கூட்டுக்களை விருத்தி செய்வதன் மூலம் அல்லது தேசிய தொழிலாளர் இயக்கங்களின் ஊடாக நெருக்குவாரம் கொடுப்பதன் மூலம் சோவியத் யூனியன் தொடர்பாக முதலாளித்துவ அரசாங்கங்களை ஒரு சாதகமான மனோபாவத்தினை கடைப்பிடிக்க செய்வதன் மூலம் இந்த ஆபத்தினை தவிர்ப்பதில் பயனுள்ளதாக விளங்கமுடியும்.
இங்கிலாந்தில் அத்தகைய ஒரு கொள்கை 1925-26ல் ஆங்கிலோ- ரஷ்யன் கமிட்டியின் ஸ்தாபிதத்தின் ஊடாக அமுல் செய்யப்பட்டது. இக்கமிட்டி பிரித்தானிய பொது வேலைநிறுத்தத்தினை காட்டிக் கொடுத்தது.

சீனாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கோமின்டாங்குடனும் அதன் தலைவர் சியாங் கேய் சேக்குடனும் உறவினை வளர்த்துக்கொள்ள முயன்றது. ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கின் அரசியல் நெறிமுறைக்கு அடிபணியுப்படி உத்தரவிட்டார். இது ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' எனப்பட்டது. அவையாவன; தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவம், தேசிய முதலாளி வர்க்கம் என்பனவாகும்.

1926 மேயில் கோமின்டாங் ஒரு அனுதாபக் கட்சியாக கம்யூனிச அகிலத்தினுள் அனுமதிக்கப்பட்டதோடு சியாங் கேய் சேக் அதன் தலைமைப்பீடத்தின் ''கௌரவ அங்கத்தவர் ஆக்கப்பட்டார்.

தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகர போராட்டத்தின் ஒரு அலைவீச்சின் பின்னணியிலேயே கோமின்டாங்கும் சியாங் கேய் சேக்கும் மேன்மைப்படுத்தப்பட்டனர். வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி சீன முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையேயான மோதுதலை உக்கிரமாக்கியதோடு முதலாளி வர்க்கத்தினை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அப்பட்டமாக தள்ளியது. ஆனால் கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச தலைமை சீனாவின் தேசிய ஒடுக்குமுறை சகல வர்க்கங்களையும் அடிமைப்படுத்தி, அவற்றினை புரட்சிகரப் போராட்டத்தினுள் தள்ளியுள்ளது என்ற அடிப்படையில் வர்க்க சக்திகளின் வேறுபாட்டினை நிராகரித்தது. இந்த போலிக் கருத்துப்பாட்டிற்கு எதிராக ட்ரொட்ஸ்கி வாதிட்டதாவது;
வெளியிலிருந்து ஏகாதிபத்தியம் பொறிமுறையில் சகல வர்க்கங்களையும் ஒன்றாக ஒட்டுப் போடுகின்றது என நினைப்பது முற்றிலும் தவறானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகர போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகப்ை பலவீனப்படுத்துவதற்கு மாறாக பலப்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் சீனாவின் உள்ளார்ந்த உறவுகளில் ஒரு பெரிதும் பலம் வாய்ந்த சக்தி இந்தச் சக்தியின் முக்கிய மூலம் யாங்சியாங் நதியின் நீரில் நிற்கும் யுத்தக் கப்பல்கள் அன்றி -அவை இரண்டாம் பட்சமானவை மட்டுமே- வெளிநாட்டு மூலதனத்துக்கும், தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களே.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அதன் பொருளாதார, இராணுவ பலம் காரணமாக சீன மக்களின் வெகு ஆழத்தில் இருந்த சக்திகளின் ஒரு பலம்வாய்ந்த உழைப்பை வேண்டி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைப்பாளி மக்களை அவர்களின் காலடிக்கு கொணரும் அனைத்தும் தேசிய முதலாளி வர்க்கத்தினை தவிர்க்கமுடியாத விதத்தில் ஏகாதிபத்தியத்துடன் அப்பட்டமான கூட்டுக்கு தள்ளுகின்றது. முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளர், விவசாயிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் பலவீனப்பட்டுவிடவில்லை. ஆனால் மாறாக ஒவ்வொரு கடும் மோதுதல்களிலும்- இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம்வரை இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் ஆழமாக்கப்பட்டுள்ளது. (Leon Trotsky on China [New York: Anchor, 1976], p.161).

இடது எதிர்ப்பின் எச்சரிக்கைகள் 1927 ஏப்ரல் 12ம் திகதி சியாங் கேய் சேக்கின் படைகளால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் ஷங்காயில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. சீயாங்கின் சதி, தேசிய முதலாளி வர்க்கத்தின் ''வலதுசாரியினரை'' கொண்ட கோமின்டாங்கின் ஒரு சிறிய பிரிவினரின் காட்டிக்கொடுப்பு மட்டுமே எனக்கூறி கம்யூனிச அகிலம் இந்தப் பேரழிவுமிக்க தோல்விக்கான பொறுப்பினை மறுக்க முயன்றது. ஸ்ராலினிஸ்டுக்கள் சியாங்குக்கு எதிராக கோமின்டாங்கின் ''இடது கன்னையை'' நிறுத்தினர். அது ''நான்கு வர்க்கக் கூட்டின்'' 90 வீதத்தினை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வூகானில் உள்ள 'இடது' கோமின்டாங் அரசாங்கத்தினை மையமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் 1927 ஜுலை யில் வூகான் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மிலேச்சமானதாக திரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களையும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களையும் படுகொலை செய்தது. தனது கொள்கைகள் அடியோடு சரிந்து கொட்டியதை எதிர்கொண்ட ஸ்ராலின், பேரழிவில் போய் முடிந்த கன்டோன் கம்யூன் எனப் பேர்பெற்ற கையாலாகாத்தனமான சாகசத்துக்கு அங்கீகாரம் வழங்கினார். 1928ன் ஆரம்பத்தில்- ஓராண்டுக்கு முன்னர்தான் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அடியோடு இல்லாமல் போயிற்று.

இந்த தோல்வியின் வரலாற்று விளைவுகளை உண்மையில் புறக்கணித்துவிட முடியாது இதன் உடனடி பெறுபேறாக இடது எதிர்ப்பு இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு அரசியல் தோல்விக்கு சென்றதற்கு அப்பால் சீனப் புரட்சியின் தோல்வி 'வெறுமனே' 20 ஆண்டுகளால் தாமதப்படுத்தப்படவில்லை. 1949ல் ஆட்சிக்கு வந்த மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உடற்கூறும் சமூகச் சேர்க்கையும் 1927 தோல்வியின் விளைவு காரணமாக- மிகவும் ஆழமான விதத்தில் பரிணாமம் செய்யப்பட்டது. மார்க்சிச அர்த்தத்தில் அது முற்றிலும் ஒரு தொழிலாளர் கட்சியே அல்ல.

''தனிநாட்டில் சோசலிசத்தின்'' பரந்த முக்கியத்துவம்

''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' கோட்பாடானது மிகவும் நனவான முறையிலும் நேரடியாகவும் சோவியத் யூனியன் மீது ஏகாதிபத்திய நெருக்குவாரத்தினை திணிக்கும் நோக்குடன் பாதுகாப்புக் கூட்டுக்களை உண்டுபண்ணுவதை நோக்கி கம்யூனிச அகிலத்தின் மூலோபாயத்தினை சந்தர்ப்பவாத ரீதியில் மறு அணிதிரளச் செய்ய இட்டுச் சென்றமை தெளிவாகியது. ஸ்ராலினின் அறியாமைமிக்க கணிப்புக்களுக்கு அப்பால் சியாங்கை மகோன்னதமாக காட்டியமை, தேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையாக விளங்கிய தத்துவார்த்த கருத்துப்பாட்டில் இருந்து பெருக்கெடுத்து வந்தது. ஸ்ராலினின் 'தத்துவத்தின்' நடுமையமாக வரலாற்றுச் சகாப்தம் பற்றிய முற்றிலும் வேறுபட்ட வரைவிலக்கணம் விளங்கியது. நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு முரண்பட்ட விதத்தில் சகாப்தம் பற்றிய ஸ்ராலினிச கருத்துப்பாடானது கணிசமான உள்ளார்ந்த சக்திகொண்ட பொருளாதார அமைப்பின் தேசிய அரச வடிவத்தினை குறித்து நின்றது. இதிலிருந்து பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கம் இன்னமும் ஒரு வரலாற்று ரீதியில் முற்போக்கான பாத்திரத்தினை வகிக்கின்றது என்பது வெளிப்பட்டது மறுபுறத்தில் ட்ரொட்ஸ்கி அத்தகைய ஒரு சாத்தியத்தினை நிராகரித்தார். ஏனெனில் இறுதி ஆய்வுகளின்படி காலனித்துவ முதலாளி வர்க்கம் காலவதியான சொத்து உறவுகளில் தங்கியுள்ளது மட்டுமன்றி அதன் இருப்பும்கூட ஒரு தேசிய அரச வடிவினுள்ளேயே வேரூன்றியுள்ளது அது மனிதனின் உற்பத்திச் சக்திகளின் நியாயமான அபிவிருத்திக்கும் கூட முக்கிய தடையாக உள்ளது.

ட்ரொட்ஸ்கி ஆசியாவில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி பற்றி பெரும் அக்கறை கொண்டிருந்தார். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையிட்டு அவர் பெரிதும் நனவாக இருந்தார். ஆனால் அவர் முன்னர் போன்று தொடர்ந்தும் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் தேசிய முதலாளி வர்க்கம் மேலாதிக்கம் வகிக்கும் என்ற வாதத்தினை நிராகரித்து வந்தார். இது சம்பந்தமாக ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் பற்றி ஒரு தென்னாபிரிக்க ஆதரவாளர்கள் குழுவுக்கு 1934ல் எழுதியவற்றை நினைவு கூர்வது பொருத்தமானது;

''அதன் குறுகிய சமரசக் கொள்கை காரணமாக இதன் சொந்தக் கோரிக்கைகளை காங்கிரசினால் அடைய முடியாதிருப்பதை போல்ஷிவிக்- லெனினிஸ்டுக்கள் சுதேச மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் போல்ஷிவிக்- லெனினிஸ்டுக்கள் ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்ட வேலைத்திட்டத்தினை அபிவிருத்தி செய்கிறார்கள்'' (Writings of Leon Trotsky [1934-35] [New York: Pathfinder, 1974], p. 252).

முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் இன்னுமோர் மிகவும் ஆழமான அம்சம் ஒன்றுண்டு. பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சி கண்டுவந்த சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்களுக்கு அவர் பூரண மரியாதை செலுத்திய அதே சமயம் 'தேசிய விடுதலை' முன்னோக்கு- அடிப்படையில் 'தேசியப்' பணியினை சூல்கொண்டிருக்கும்வரை- சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் ஒரு விமர்சன நோக்காக விளங்கியது உதாரணமாக ''யுத்தமும் நான்காம் அகிலமும்'' என்ற தமது விஞ்ஞாபனத்தில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது;

''ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலவதியான புரட்சிகள் தேசிய அரசுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்தினை ஆரம்பித்து வைக்க இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து கொண்டாக வேண்டும். அரைக்காலனித்துவ நாடான ரஷ்யாவில் காலவதியான ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சிக்கு ஒரு முன்னுரையாக மட்டும் விளங்கியது போலவே காலனிகளின் விடுதலை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு இராட்சத நிகழ்வாக மட்டுமே விளங்கும்
"தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்து கொள்கின்றது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே பூகோளத்தின் சகல தேசியங்களுக்கும் ஒரு நிசமானதும் நிரந்தரமானதுமான அபிவிருத்திச் சுதந்திரத்தினை உத்தரவாதம் செய்யும்.'' Writings of Leon Trotsky [1933-34], p. 306).

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த இயக்கத்தின் பிடியில் அகப்பட்டிருந்த இந்தியா மீதான அவற்றின் கருத்துக்கள் முக்கியமாக கூர்மை கண்டிருந்தது. 1939 ஜூலையில் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ நாடுகளின் புரட்சிகர இயக்கங்களை பிரமாண்டமான முறையில் தீவிரமடையச் செய்யும் என எதிர்பார்த்து, இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ட்ரொட்ஸ்கி காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை ஸ்ராலினிஸ்டுக்கள் காட்டிக் கொடுத்ததை கண்டனம் செய்ததோடு இந்தியாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை அமைக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

அவர் எழுதியதாவது; இந்திய முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர போராட்டத்தினை வழிநடாத்த இலாயக்கற்றது. அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தயவிலும் இருந்து வருகின்றது. அவர்கள் தமது சொந்த சொத்துக்காக அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் மக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை நாடுவதோடு மேலிருந்து சீர்திருத்தங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய வெகுஜனங்களை தூங்க வைக்கின்றனர். காந்தி இந்த முதலாளி வர்க்கத்தின் போலித் தலைவரும், மோசடித் தூதுவனும் ஆவார். (Writings of Leon Trotsky [1939-40], p. 29).

ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு இலங்கையில் பலன் கிடைத்தது. 1935ல் இருந்து தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி அங்கிருந்து வந்தது. இது தொழிலாள வர்க்கத்தினுள் ஆதரவை திரட்டிக் கொண்டதோடு அவ்வாறே சம சமாஜக் கட்சி சீக்கிரம் இடதுநோக்கி பயணம் செய்தது. 1940 தொடக்கத்தில் சம சமாஜக் கட்சியின் அரசியல் வேலைத் திட்டம் பெரிதும் திட்டவட்டமான மார்க்சிச பண்பை பெற்றதோடு, அது ஸ்ராலினிஸ்டுக்களாக இனங்கண்டோரை அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியது. இந்தப் பரிணாமம் அதன் அனைத்துலக பொறுப்புக்கள் பற்றிய விளக்கத்தில் வெளிப்பாடாகியது. அதன் சொந்த ஆரம்பகால வேலைத்திட்டத்தினை விமர்சன ரீதியில் ஆய்வு செய்த சமசமாஜ கட்சித் தலைமை இலங்கையில் ஒரு 'தேசிய' புரட்சி பற்றிய முன்னைய கருத்துப்பாட்டினையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு தீவில் புரட்சிகர சோசலிச இயக்கம் ஒரு முழு இந்திய புரட்சிகர இயக்கத்தின் அத்தியாவசியமான அங்கமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. இந்த அடிப்படையில் சமசமாஜக் கட்சி இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்ததோடு கிட்டத்தட்ட அதேசமயத்தில் நான்காம் அகிலத்துடன் சேரவும் விண்ணப்பித்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து கொண்ட ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக சம சமாஜக் கட்சி இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வழங்கியது.

இவ்வாறு ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் உறுதியான போராட்டம் காரணமாக இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் தத்துவார்த்த, அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது. இது ஸ்ராலினிஸ்டுக்கள் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்காததும் அடைய இலாயக்கற்றவர்களாகவும் இருந்ததுமான ஒரு வெற்றியாகும். அங்கு அவர்கள் காந்தி, நேருவின் முதலாளித்துவ காங்கிரசின் பின்னால் பரிதாபமான முறையில் இழுபட்டனர். எவ்வாறெனினும் இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையை வெற்றி கொண்டனர். மேலும் இந்த வெற்றி, ஒரு வரலாற்று-தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்- அதாவது காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் கட்டாயமாக ஒரு தேசியப் போராட்டமாகவே இருக்கவேண்டும் என்ற பரந்தளவிலான எண்ணம், யதார்த்தத்தினை திருத்தல் புள்ளிக்கு எளிதாக்குவதை காட்டுவதோடு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சமூக சக்தியை உண்மையில் குழப்பியடிக்கவும் செய்கின்றது. இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சித் தலையீட்டின் பலம், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமது போராட்டத்தின் அடிப்படையாக கொண்டிருந்தது தேசிய விடுதலையை அன்றி அனைத்துலக முன்னோக்கினையே என்ற உண்மையில் இருந்தே பெருக்கெடுத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் பிற்கால காட்டிக்கொடுப்புக்கிடையிலும், (1950ல் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சியுடன் இணைந்து கொண்டது.) இந்த வரலாற்றுப் பங்களிப்பு ஒரு பலம் வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தினை சிருஷ்டித்தது. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துக்கு ஊக்கமளித்ததோடு கீர்த்தியின் எதிர்கால அரசியல் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டிருக்க ஒரு அத்திவாரத்தினையும் வழங்கியது.
யுத்தத்தின் பின்னைய தீர்வும் காலனித்துவ ஒழிப்பும்
ட்ரொட்ஸ்கி தமது படுகொலைக்கு சில மாதங்களுக்கு முன்னர் பின்தங்கிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்துள்ள வரலாற்றுப் பணிகளை இறுதித் தடவையாக மதிப்பீடு செய்தார். சோசலிசப் புரட்சியூடாக காலனித்துவ மேலாதிக்கம் முடிவுக்கு கொணரப்படாவிட்டால் ஏகாதிபத்திய யுத்தத்தில் இருந்து காலனித்துவ மக்களுக்கு சாதகமான தீர்வு கிட்டாது என அவர் எச்சரிக்கை செய்தார். அவர் எழுதியதாவது; ஆதலால் காலனித்துவ மக்களின் விடுதலைக்கான நம்பிக்கை முன்னரைவிட மிகவும் தீர்க்கமான முறையில் முழு உலகத் தொழிலாளர்களதும் விடுதலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பின்தங்கிய மக்களுடன் ஒன்றிணைந்து ஏகபோகங்களின் இலாபங்களுக்கு அன்றி சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் உலகப் பொருளாதாரத்தினை ஒரு புதியமட்டத்தில் புணரமைப்பு செய்யும்போதே காலனிகள் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியில் விடுதலை பெறும். இந்த வழியில் மட்டுமே காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகள் பின்தங்கிய நிலைமையின் வேறுபட்ட கட்டங்களில் இருந்து மீட்சி பெறவும் ஒரு முன்னேறும் உலக சோசலிச பொதுநலவாயத்தின் இணைந்த பகுதிகளாகத் தமது இடத்தினை எடுக்கவும் முடியும். (Documents of the Fourth International: The Formative Years 1933-40, [New York: Pathfinder, 1973], p.394).

இரண்டாம் உலகயுத்தத்தினைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனத்தினைத் துன்பகரமான முறையில் ருசுப்படுத்தின. இந்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டியது போல் பெயரளவிலான அரச சுதந்திரம் வழங்கப்பட்டமை இந்திய வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகள் இட்டு நிரப்பப்பட்டதை எந்தவொரு அடிப்படையான விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அப்படி ஏதும் இருப்பின் சுதந்திரத்தின் நிபந்தனைகள் தேசிய முதலாளி வர்க்கத்தின் முற்றிலும் பிற்போக்கான தன்மைக்கு மறுக்கமுடியாத அத்தாட்சியாக விளங்குகின்றன. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பூராவும் அநேக துன்பகரமான வடிவங்களில் மீளச் சிருஷ்டிக்கப்பட இருந்தவற்றுக்கு ஒரு மாதிரியாக விளங்கிய இந்தியப் பிரிவினை, ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் கட்டிக் காத்தது. தொழிலாள வர்க்கத்தினை பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துவதற்கு இனவாத குரோதங்களை ஊக்குவிக்கவும், சாதுரியமாகச் செய்து முடிக்கவும் ஏகாதிபத்தியத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இதனால் வழி திறந்தது.

இலங்கையில் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இலங்கை முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையேயான உடன்படிக்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து தேசிய ஐக்கியத்தினையோ அல்லது சுதந்திரத்தினையோ அடையவில்லையென்ற ரீதியில் ஒரு அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்தனர். உண்மையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கை ரீதியான நிலைப்பாடு உடனடியாகவே நிரூபிக்கப்பட்டது. இலங்கை முதலாளி வர்க்கம் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தீர்க்கமான ஒரு பாத்திரத்தினை வகித்த பகுதியினருக்கு- தமிழ் தோட்டத் தொழிலாளருக்கு- எதிராக அவர்களின் குடியுரிமையை ஒழித்துக்கட்ட ஒரு குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது குடியுரிமையானது பிறப்பு, வதிவிடம் அல்லது வேலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவிருந்தது. இம் மசோதா, முதலாளி வர்க்கம் தனது சொந்த நடவடிக்கையின் மூலம் தேசிய ஐக்கியத்துக்கான முக்கிய தடையாக உள்ளதை எடுத்துக் காட்டியது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்வின் ஆர். டி. சில்வாவினால் ஒரு தீர்க்கதரிசனமான உரை நிகழ்த்தப்பட்டது;
''இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் அரசியல் தத்துவம் இருப்பின்- அதைப்பற்றி கூறவேண்டியது இதுதான்: இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் ஊகத்தின் ஊடாக முன்செல்லுமானால், இந்த அரசாங்கம் நனவற்ற ரீதியில் நடைமுறைப்படுத்தும் அடிப்படை மெய்யியல் அல்லது அரசியல் அல்லது சமூகவியல் கொள்கையானது அரசு இனத்துக்கும் இனம் சாதிக்கும் சமமாக விளங்க வேண்டும் என்பது தெளிவு. குடியுரிமைக்கான அடிப்படைக் கொள்கையாக பரம்பரையை கொள்வதில் இருந்து ஊற்றெடுக்கக்கூடிய வேறு அர்த்தமோ அல்லது வேறு தத்துவமோ இருக்க முடியாது. இது ஒரு காலவதியானதும் வெடித்துச் சிதறியதுமான ஒரு தத்துவமாகும். சரியாக முதலாளித்துவ அமைப்பு வீழ்ச்சி காணும் இன்றைய காலப்பகுதியில் பிற்போக்கு சேவகம் செய்யும் பொருட்டு இந்தப் பழையதும் காலவதியானதுமான தத்துவத்திற்கு புத்துயிரழிக்கப்பட்டுள்ளது. இனத்தினை சாதியுடன் சமப்படுத்த முயல்வதும் அரசின் சேர்க்கையில் சாதியை ஆளும் காரணியாக்குவதும் சரியாக பாசிசத்தின் கீழேயே. ஆதலால் இலங்கைக் குடியுரிமை அந்தஸ்த்து ஒரு சாதி அந்தஸ்தின் நிலைக்கு கீழிறக்கப்படும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதுவும் எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.''

இந்த மேற்கண்ட பந்தி கீர்த்தி 1987 இலையுதிர் காலத்தில் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. அவர் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸட் கட்சியின் ஆரம்பகால போராட்டங்களை அடிக்கடி குறிப்பிட்டு வந்தார். ஏனெனில் அவர் தன் வளம்பொருந்திய வரலாற்று பாரம்பரியங்களில் இருந்து புத்திஜீவி, அரசியல் உந்துசக்தியை பெற்று வந்தார். ஒரு காலத்தில் இந்திய, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கியவர்களால் அப்பாரம்பரியங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தின் விளைபயனாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தோன்றிய போதிலும் கீர்த்தி, கொல்வின் ஆர். டி. சில்வா போன்றவர்களின் பங்களிப்பின் நிலையான பெறுமானத்துக்கு என்றுமே புறமுதுகு காட்டியதில்லை. 1948ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு கீர்த்திக்கு அவ்வளவு பெரும் முக்கியத்துவமாக இருக்கக் காரணம், பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயத்தினை விவரிப்பதில் யுத்தத்தின் பின்னைய தீர்வின் பிரச்சினை அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதியதே.

கீர்த்தி அடிக்கடி வலியுறுத்தி வந்ததுபோல் வரலாற்று முன்னேற்றத்தின் நலனுக்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யமுடியாத தேசிய முதலாளி வர்க்கத்தின் உயிரின இயலாமையானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் நனவான வடிவம் எடுத்தது. ஒரு மோசடியான ''அரச சுதந்திரம்'' ஆக விளங்கிய இது முன்னைய காலனிகளின் வெகுஜனங்களின் மேலாக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தினை தொடர ஒரு மூடுதிரையை வழங்கியது. அரச சுதந்திரம் ஏதோ ஒரு விதத்தில் அரைகுறை வெற்றியை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அதற்கு தேசிய முதலாளி வர்க்கம் குறைந்தபட்சம் ஏதோவொரு பெருமைக்கு உரியதெனவும் காட்டும் பப்லோ- மண்டேல் சந்தர்ப்பவாதிகளின் சீர்திருத்தவாத பரிந்துரையாளர்களின் வாதங்களை கீர்த்தி அடியோடு நிராகரித்தார். தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் காஸ்ட்ரோ, பென்பெல்லா மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதிகளுக்கு பப்லோவாதத்தின் அடிபணிவுக்கு எதிராக அனைத்துலகக் குழு நடாத்திய கசப்பான போராட்டங்களின் அடிப்படை படிப்பினைகளை கீர்த்தி உள்ளீர்த்துக் கொண்டார்.

பங்களாதேஷில் இந்திய ஆக்கிரமிப்பு

கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கையில் 1971க்கு முன்னரே கீர்த்தி சோசலிச தொழிலாளர் கழகத்தின் (பிரித்தானிய) தலைமையுடன் மோதிக்கொண்டது அதிர்ச்சி தராது போகலாம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அடிப்படையாக கொண்டிருந்த அரசியல் அத்திவாரத்தின் அடிப்படையில் 1960களின் கடைப்பகுதியில் இருந்து சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் பெரிதும் தலைதூக்கிய சந்தர்ப்பவாத போக்குகளுக்கு அவரால் தீவிரமாக உணர்ச்சிவசப்படாது இருக்க முடியவில்லை. குறிப்பாக தீர்க்கமான பிரச்சினைகள் அனைத்திலும் மைக் பண்டா சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு தலைமை தாங்கிய அரசியல் மூவர் கூட்டின் பாகமாக ஹீலி சுலோட்டருடன் சேர்ந்து ஒரு தனித்துவமான சந்தர்ப்பவாத பண்பு கொண்ட நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்தார். முதலில் 1960களின் கடைப்பகுதியில் பண்டா, மாவோ சேதுங், ஹோசிமின் கொள்கைகள் ஸ்ராலினிசத்துக்கு ஒரு பதிலீடாகும் எனவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டினுள் நல்லனவற்றை பொறுக்கி எடுத்து பிரயோகிப்பதுமாகும் எனவும் கூறி மாசோ சேதுங், ஹோசிமினுக்கு உணர்ச்சிமயமான புகழாரம் சூட்டத் தொடங்கினார். இருப்பினும் ஹீலி, பண்டாவுடனான அரசியல் மோதுதலை தவிர்க்கும் பொருட்டு அவரின் பெரிதும் ஊதாரித்தனமான பிரகடனத்தை, ஒரு தனிப்பட்ட விசித்திரமின்றி வேறொன்றுமல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார். முன்னர் அவர்களின் எதிர்ப்புக்கு இலக்கான பப்லோவாதிகளை போலவே சோசலிச தொழிலாளர் கழகமும் அன்று மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு அடிபணிந்து கொண்டிருந்தது என்பதே அரசியல் யதார்த்தமாகும்.

சோசலிச தொழிலாளர் கழகத்தினுள்ளே சவால் செய்யப்படாத இடது முதலாளித்துவ தேசிய வாதத்தின் மாவோ வாதமும், தேசிய விடுதலை முன்னணி (NLF) யின் அரசியலும் இதன் பல்வேறு வடிவங்களாகும். இச்சக்தி பண்டாவினால் மகத்தானதாக்கப்பட்டமை யுத்தத்தின் பின்னைய தீர்வினதும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களதும் வரலாற்று முக்கியத்துவத்தினை பல்வேறு விதத்திலும் மீள மதிப்பீடு செய்வதாக அபிவிருத்தி கண்டது. முன்னைய காலனிகளில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகள் தேசிய சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தில் நிஜ முன்னேற்றங்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் தொழிலாள வர்க்கம் இந்த அரசுகளுக்கு அரசியல் ஆதரவு வழங்க கடமைப்பட்டுள்ளது என்ற கருத்துப்பாட்டினை பண்டா படிப்படியாக அபிவிருத்தி செய்தார்.

1971-72ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் சாரம் இங்கேதான் உள்ளது. நாம் இதன் பின்னணியை சுருக்கமாக ஆராய்வோம். 1971 கோடையில் சேக் அப்துல் ரஹ்மானின் தலைமையிலான முதலாளித்துவ தேசிய அவாமி லீக், கிழக்கு பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றது. இப்பிராந்தியத்தில் வங்காளி மக்கள் வாழ்ந்து வந்ததோடு பாகிஸ்தானின் ஏனைய பாகத்தில் இருந்து ஆயிரம் மைல்களால் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தது. அவாமி லீக்கின் வெற்றியின் பிரதிபலிப்பாக யாஹ்யா கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் இராணுவ ஜூன்டா கிழக்கு பாகிஸ்தானை ஆக்கிரமித்து கானின் இராணுவம் வங்காளி மக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை நடாத்தியது. எவ்வாறெனினும் கோடை, இலையுதிர் காலங்களில் முக்திபாஹினி என்ற ஒரு கெரில்லா இயக்கம் வெற்றிகரமான எதிர்த்தாக்குதலை ஒழுங்கு செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் நெருக்கடி உக்கிரமடைந்ததை தொடர்ந்து கிழக்கு வங்காளத்தில் ஒரு தீவிரவாத ஆட்சி நிலைபெறும் என அஞ்சிய இந்திய அரசாங்கம் இராணுவ ரீதியில் தலையிட்டது. இது திடீரென இடம்பெறவில்லை. இதே சமயத்தில் இந்திய அரசாங்கம் மேற்கு வங்காளத்தில் தீவிரவாத நக்சலைட் இயக்கத்தை மூர்க்கமாக ஒடுக்கித் தள்ளுவதில் ஈடுபட்டிருந்தது.

பண்டா பெருமகிழ்ச்சியில் திழைத்தார். 1971 டிசம்பர் 6ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் எழுதியதாவது; ''பங்களாதேசுக்கு இராணுவ, பொருளாதார உதவி வழங்கும் இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் தீர்மானத்தினை நாம் விமர்சனத்துடன் ஆதரிக்கின்றோம்.''

1971 டிசம்பர் 8ம் திகதி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் சுயாதீனமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலைப்பாடு சோசலிச தொழிலாளர் கழகத்துக்கு நேரெதிரானதாக விளங்கியது;

''கிழக்கு வங்காளத்தின் விடுதலையாளர்கள் தாமே எனக்கூறும் இந்திய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை இந்திய தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும் என நாம் வேண்டுகின்றோம். கிழக்கு வங்காளத்திலான இந்திய இராணுவ தலையீட்டின் இலக்கு ஒன்றேயொன்றுதான் என ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரகடனம் செய்கின்றனர். பங்களாதேஷ் போராட்டம் ஒரு புரட்சிகர அடிப்படையில் முழு வங்காளத்தையும் இணைக்கும் போராட்டமாக அபிவிருத்தியடைவதை தடுக்கவே இது இடம்பெற்றது. இந்திய இராணுவத் தலையீடு, புரட்சிகர வங்காளி விடுதலைப் போராட்டத்தினை சிதறடிக்கவும், வங்காளத்தில் வெகுஜனங்களின் எழுச்சியை நசுக்கவும், முதலாளி வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலனின் பேரில் வெகுஜன இயக்கத்தினை சிறைப்பிடித்து வைக்கும் பொருட்டு மோசடியான முறையில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் பெயரை பலாத்காரமாக தட்டிப் பறித்துக்கொண்டுள்ள ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவவுமே தீட்டப்பட்டது. ஆதலால் நாம் இந்திய தொழிலாள வர்க்கம் முக்திபாகினியின் போராட்டத்துக்கு சகல விதத்திலும் ஆதரவளிக்கும் அதேவேளையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி யுத்தம் தொடர்பாக ஒரு புரட்சிகர தோற்கடிப்பு நிலைப்பாட்டினை வகிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

''இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாள வர்க்கத்துக்குரிய ஒரே புரட்சிகர வேலைத்திட்டம் இதுவே.
யுத்தத்தின் பின்னைய துணைக்கண்டத்தின் முழு வரலாற்றினையும் மார்க்சிச ரீதியில் ஆய்வு செய்வதில் இருந்து தர்க்கரீதியிலும் ஈவிரக்கமற்ற முறையிலும் இது பெருக்கெடுக்கின்றது. ''பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் அதன் விசுவாசமான ஊழியர்களுக்கு இந்நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கத்துக்கு மோசடி ''சுதந்திரம்'' வழங்கப்பட்டதன் பின்னரான 25 வருடங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தினால் எந்தவொரு அடிப்படைப் பொருளாதார தேசிய அல்லது சமூகப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட முடியாது என்பது அம்பலமாக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று பணிகளின் எதிரில் அவர்களின் முற்றுமுழுதான வங்குரோத்து, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் மைய ஆய்வினை நிரூபித்துள்ளது. சோசலிசப் புரட்சியின் பணியின் ஒரு பாகமாக கிராமிய ஏழை வெகுஜனங்களை தன்பின்னால் அணிதிரட்டிக் கொள்ளும் தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பதையும் நிரூபித்துள்ளது. இந்து- முஸ்லீம் முதலாளி வர்க்கத்தினதும் அத்தோடு அனைத்துலக ஸ்ராலினிசத்தினதும் ஆதரவுடன் பிரித்தாளும் கொள்கைக்கு இணங்க இந்தியத் துணைக்கண்டத்தினை துண்டாடுவது திட்டமாக விளங்கியது. கோடானுகோடி ஒடுக்கப்படும் வெகுஜனங்களுக்கு முதலாளித்துவத்தினதும், பட்டினியினதும், பஞ்சத்தினதும் துயரங்களதும் மேலாதிக்கத்தினை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் இதனுள்ளே பிரமாண்டமான சமூக, தேசிய முரண்பாடுகள் நசுக்கி ஒடுக்கப்பட்டன. இந்த முரண்பாடுகள் முழு அனைத்துலக ஏகாதிபத்திய அமைப்பினது ஒரு பாகமாகவும் அதன் பெறுபேறாகவும் வளர்ச்சியடைவதோடு அவற்றைத் தொடர்ந்தும் அடக்கிவைக்க முடியாது''.

கீர்த்தியினால் 1971 டிசம்பர் 16ம் திகதி கிளிவ் சுலோட்டருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் இதனை அப்பட்டமாக பிரகடனம் செய்தது. ''இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தை எதிர்க்காமல் வங்காளி மக்களின் தேசிய விடுதலை போராட்டத்துக்கும் சோசலிச அடிப்படையிலான இந்தியாவின் சுயவிருப்பிலான ஒன்றிணைப்புக்கும் ஆதரவளிப்பது சாத்தியம் இல்லை., அத்தகைய ஒரு ஒன்றிணைப்புக்கு முக்கிய தடையாக உள்ள இந்திய பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்களைத் தூக்கி வீசும் போராட்டம் இல்லாமல் எப்படி ஒருவர் இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றித் தன்னும் பேசமுடியும்?
1972 ஜனவரி 11ம் திகதி மற்றொரு கடிதத்தில் கீர்த்தி இந்திய இராணுவ வெற்றியை உற்சாகமாக அங்கீகரிக்கும் பண்டாவை கண்டனம் செய்து எச்சரித்தார்; இந்திய இராணுவத்தை பற்றிய அலட்டலின் பின்னணியில் வங்காளி, பாகிஸ்தானிய, இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயல்பின் தெளிவான நிராகரிப்பு உள்ளது''.
மைக் பண்டா இறுதியாக 1972 ஜனவரி 27ல் பதிலளித்தார்; யுத்தம் எதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது; முதலாவதாக இது பங்களாதேஷ் மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூரண ஆதரவுடன் நசுக்கும் பாகிஸ்தானிய முதலாளி வர்க்கத்தின் முயற்சியை பிரதிநிதித்துவம் செய்தது. ஆனால் மிகவும் முக்கியமானதும் அகதிகள் பிரச்சினையை சிருஷ்டித்ததன் மூலமும் கிழக்கு வங்காளத்தினை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்ததன் மூலமும் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உள்நாட்டுச் சந்தைக்கு எதிரான ஒரு திட்டவட்டமான அச்சுறுத்தலாக வளர்ச்சி கண்டது.

''ஒரே இரவில் நிலைமையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டது. இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கும், இந்திய முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் ஒழிந்து போகவில்லை. ஆனால் இது இந்திய நாட்டுக்கும் பாகிஸதான் பிரதிநிதித்துவம் செய்த ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான மோதுதலால் தாண்டிச் செல்லப்பட்டது.''
இது உண்மையில் விசித்திரமானதாய் விளங்கியது; பண்டாவின் கூற்றுப்படி வர்க்கங்களுக்கு இடையேயான மோதுதல் இந்திய, பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான போராட்டத்துக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் மார்க்சிசத்தின் மிக அத்தியாவசியமான அடிப்படைக் கொள்கைகளை காட்டிக் கொடுப்பதை பிரதிநிதித்துவம் செய்தது. தமது தேசிய எதிரி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜேர்மன் (அல்லது பிரான்சிய, ரஷ்ய, பிரித்தானியா போன்ற) தேசிய இனத்தின் மோதுதலால் தொழிலாள வர்க்கத்துக்கும் அதன் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடுகளால் தாண்டிச் செல்லப்பட்டுவிட்டது என 1914ல் வாதிட்ட சமூக- சோவினிஸ்டுகளுக்கும், பண்டாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் இருக்கவில்லை.

பண்டா மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பலதடவை வீசப்பட்ட வார்த்தைகளை கொண்டே கீர்த்தியை எச்சரித்தார்; ''உங்களது மனோபாவம் பிடிவாதமும், வளைந்து கொடுக்காததுமாகும். ஆதலால் இது யதார்த்தத்தின் பல கோணங்களையும் முரண்பாடுகளையும் விசுவாசமாக பிரதிபலிக்க முடியாது. அதன் காரணமாக வெகுஜனங்களுள் செல்ல ஒரு வழியைக்காண முடியாது..''

இறுதியில் பண்டாவிடம் இருந்து வந்த கடிதம் ஒரு பெரிதும் பரிதாபமான குறிப்புடன் முடிவுற்றது; ''இவை அனைத்தில் இருந்தும் பங்களாதேசில் இந்தியப்படைகளின் தொடர்ச்சியான பிரசன்னத்தையோ அல்லது கெரில்லாக்களை ரஹ்மான் நிராயுதபாணியாக்குவதையோ நாம் ஆதரிக்கின்றோம் என்ற முடிவுக்கு வரவேண்டாம். நாம் அதை இன்றும் எதிர்க்கின்றோம். அன்றும் எதிர்த்துள்ளோம்.''
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினுள்ளே சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி
கீர்த்தியின் விமர்சனங்கள் அன்று வெளிச்சத்தைக் காணாததோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதற்கு பெரும் நஷ்டஈடு கொடுக்கநேரிட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி வெகுவேகமாக வலதுபக்கம் அடிபட்டுச் சென்றது. றொடீசியா, ஈராக், லிபியா அல்லது லெபனான் எங்கும் முதலாளித்துவ தேசியவாதிகளின் அரசியலை காப்பதிலும், நியாயப்படுத்துவதிலும் மேலும் மேலும் வெட்கக்கேடான முறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. இதேசமயத்தில் பண்டா தேசிய முதலாளி வர்க்கத்தின் அரச நிர்மாண சாதனைகள் எனப்பட்டதன் தீவிர ஆதரவாளரானார். இது உண்மையில் பயங்கரமான அரசியல் விளைவுகளை கொணர்ந்தது.

1979ல் கொலையாளி சுகார்ட்டோ தலைமையிலான இந்தோனேசிய ஜூன்டா கிழக்கு தீமோர் சுதந்திர பிரகடனத்துக்கு படைகளை அனுப்பியும் பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்தும் பதிலளித்தது. கிழக்கு தீமோர் சுதேசிகளின் பிரிந்து செல்லும் உரிமையை பேணிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அவுஸ்திரேலிய கிளையான சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு எதிராக பண்டா, சுகார்ட்டோ இந்தோனேசிய தேசிய இயக்கத்தின் மாபெரும் வெற்றிகளை அதாவது இந்தோனேசிய தீவுக் கூட்டங்களின் ஐக்கியத்தை பேணுகின்றார் என்ற அடிப்படையில் கிழக்கு தீமோர் ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தினார்.

1978-1982க்கும் இடையே ரொழிலாளர் புரட்சிக் கட்சி தொழிலாள வர்க்கத்தினை பாலஸ்தீன விடுதலை இயக்கம், முகாபே, என்கோமாவின் தேசபக்த முன்னணி போன்ற முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கும் லிபியா, ஈரான், ஈராக் போன்ற முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் கீழ்ப்படுத்தியதன் மூலம் ட்ரொட்ஸ்கிச அடிப்படைக் கொள்க்ைகளை படிப்படியாக காட்டிக்கொடுத்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு, 1982 டிசம்பர் 31ம் திகதி ஜக் பார்ண்சின் ஒரு பேச்சில் மிகவும் தெளிவான விதத்தில் உச்சரிக்கப்பட்ட பப்லோவாதிகளின் நிலைப்பாட்டை பிரதிபலித்தது. அவர் கூறியதாவது: ''நிரந்தரப் புரட்சி ஒரு சரியான அனுமானமோ அல்லது போதுமான ஒன்றோ அல்ல. பிரச்சினையை தீர்ப்பது ஒருபுறம் இருக்க பிரச்சினை எதுவென காட்டி அதை நெருங்குவதாயும் இல்லை. எனது அபிப்பிராயத்தின்படி நிரந்தரப் புரட்சி சரியில்லாததோடு எமது வேலைத்திட்டத்தின் பொது வார்த்தைகளில் பயனற்றதுமாகும் எனச் சுட்டிக்காட்டி அதைக் கைவிடுவதன் மூலம் நாம் மேலும் நன்மை பெறுவோம்.''

பார்ண்சின் பதிலீடு என்ன? ''நாம் எம்மை FSLN உடனும், நியூ ஜூவல் இயக்கத்துடனும், கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் சேர்ந்த ஒரு பொது உலக மார்க்சிச இயக்கத்தின் பாகமாக கொள்கின்றோம்.''
பார்ண்சின் பேச்சு எமது மனதில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பயணப் பாதையை பற்றி எதுவித சந்தேகத்துக்கும் இடம்வைக்காததோடு 1984 பெப்ரவரி 11ம் திகதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு நாம் சமர்ப்பித்த அறிக்கையில் எமது ஆய்வின் கணிசமான பகுதியை பார்ண்சின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்ய அர்ப்பணித்தோம். இது எவ்வாறெனினும், பண்டாவை கோபாவேஷம் கொள்ளச் செய்தது. அவர் ஆத்திரத்துடன் கூறியதாவது; ''நீங்கள் பார்ண்சுடன் தொடங்கி தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் முடிக்கிறீர்கள்'' உண்மையில் அது அப்படியே விளங்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிறைபேரவை தொடருக்கு அழைக்கப்படாததோடு இன்னுமோர் 22 மாதங்களுக்கு அவர்கள் எனது விமர்சனத்தை அறிந்துகொண்டும் இருக்கவில்லை. ஆனால் கீர்த்தி அதில் கலந்துகொண்டிருப்பின் அவர் இந்த அறிக்கைக்கு உறுதியான அங்கீகாரத்தை வழங்கியிருப்பார் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உள்ளேயான போராட்டம் ஒரு புறநிலை முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தர்ப்பவாதிகளால் மகோன்னதமானவையாக காட்டப்பட்ட முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் சரிவினை முன்னணிக்கு கொணர்ந்த உலக நிலமையிலான ஆழமான மாற்றங்களை இது எதிர்பார்த்திருந்தது.
தேசிய விடுதலையுடனான அனுபவங்களின் சாராம்ச சுருக்கம்
யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பற்றிய எந்தவொரு புறநிலை ரீதியான ஆய்வும் முதலாளித்துவ தேசியவாதத்தின் தெளிவான தோல்வியையும் அதன் ஆதரவுடன் நிறுவப்பட்ட ''சுதந்திர அரசுகளின்'' போலிப் பண்பையும் பிரத்தியட்சமாக்குகின்றது.
அந்த நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வேடதாரி கம்யூனிச பண்புகொண்ட இயக்கங்களால் நடத்தப்பட்ட போதிலும் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிவதாகவே விளங்கியது.

சீனா இன்று முற்றிலும் முதலாளித்துவ பாதையில் பயணம் செய்கின்றது. முப்பது ஆண்டுகளாக பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த வியட்நாம் உலகிலேயே மலிவான ஊழியம் கிடைக்கும் நாடாகத் தன்னை விளம்பரம் செய்யும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

அனைத்துலகக் குழுவின் உள்ளேயான பிளவு ''தேசிய விடுதலை'' இயக்கங்களின் முழு வரலாற்று முக்கியத்துவத்தினையும், தொழிலாள வர்க்கத்துடனான அவற்றின் உறவையும், சோசலிசப் புரட்சி முன்னோக்கினையும் தீவிரமாக மீளாய்வு செய்வதைச் சாத்தியமாக்கியது. சிறப்பாக கீர்த்தி கொழும்பு அரசாங்கத்துக்கும் இலங்கையின் வடக்கேயுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தின் அரசியல் அபிவிருத்தியை ஆய்வு செய்கையில் 1985-87 இடையேயான இந்த தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய கீர்த்தியின் மதிப்பீடு அதிகரித்த விமர்சனத் தன்மை மிக்கதாகியது என நான் குறிப்பிட்டாக வேண்டும்.

வரலாற்று அறிக்கையின் பொருட்டும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் போக்கின் பரிணாமத்தை புரிந்து கொள்ளவும் அனைத்துலகக் குழுவினுள்ளே தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிஜ துரோகப் பாத்திரத்தையும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான அதன் தாக்கத்தினையும் திரும்பவும் ஒருதடவை இங்கு வலியுறுத்துவது அவசியம். தமிழ் தேசிய இயக்கம் தொடர்பாக கீர்த்தியும் அவரின் சக தலைவர்களும் ஆழமாக முரண்பட்டுக்கொண்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டினை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது திணிக்க 1972- 1979 இடையே தொழிலாளர் புரட்சிக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒழுங்கு விதிகளை பயன்படுத்தியது. அதாவது யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகள் ஒரு முற்போக்கு வரலாற்றுத் தோற்றப்பாட்டினை கொண்டவை என்ற பண்டாவின் கருத்தின் அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் வெகுஜனங்களின் போராட்டத்தினை அடியோடு எதிர்த்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகளின் நியாயமான தன்மையை முற்றிலும் பிற்போக்கான முறையில் பேணுவதை அடிப்படையாகக் கொண்ட தமிழ் விடுதலை இயக்கம் தொடர்பான அவர்களின் எதிர்ப்பு, ஒரு வலதுசாரி பண்பினைக் கொண்டிருந்தது. பின்னர் 1979ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் பிரச்சினை தொடர்பான அதன் நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டது. பீ. எல். ஓ. மற்றும் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் தொடர்பான அதன் மனப்பாங்கிற்கு அமைய இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆர்வம் மிகுந்த, விமர்சனமற்ற ஆதரவாளராகியது.

பிளவின் பின்னரே யுத்தத்தின் பின்னைய முழுக் காலப்பகுதியினதும் வளம் மிக்க வரலாற்று அனுபவங்களினதும் கட்டுமானத்தினுள் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளை மீள் பரிசீலனை செய்வதும், நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினை தீர்க்கமான முறையில் பிரயோகிப்பதும் சாத்தியமாகியது. பல தடவைகள் கீர்த்தி கூறியது போன்று தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதிகள் ''நீரைக் கலக்கி சேறாக்கியதோடு'' இன்று அனைத்துலகக் குழு உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தினை தெளிவுபடுத்துவதன் மூலம் மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீள வலியுறுத்த நேரிட்டது.

இலங்கையில் உள்ள சகல சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சலிக்காது பேணியதோடு வடக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையைக் காப்பாற்றியது. தமிழருக்கு எதிரான கொழும்பு சிங்கள சோவினிச ஆட்சியாளர்களின் இரத்தம் தோய்ந்த யுத்தத்தினை உறுதியாக எதிர்த்தது. எவ்வாறெனினும் சிங்கள சோவினிஸ்டுக்களுக்கும் அவர்களின் பிற்போக்கு முதலாளித்துவ அரசுக்கும் சிறிதும் பணிந்து போகாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எதிர்ப்புக்கிடையேயும், கீர்த்தி தமது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பணியினை வெறும் ''தேசிய விடுதலை'', ''சுயநிர்ணயம்'' சுலோகங்களை விமர்சனமின்றிக் கூப்பாடு போடுவதன் அடிப்படையில் உரியமுறையில் வரையறுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்துகொண்டிருந்தார்.

1987 ஆகஸ்ட் முற்பகுதியில் கைச்சாத்தான இந்திய- இலங்கை உடன்படிக்கை வேறெதனையும் விட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வங்குரோத்தினை அம்பலப்படுத்தியது. கீர்த்தி இந்த அபிவிருத்தியினை ஒரு கடிதத்தில் பொறித்ததோடு அது அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தின் மேலாய அபிவிருத்திக்கான அடிப்படையை வழங்கியது.

1987 செப்டம்பர் 11ம் திகதி அவர் எனக்கு எழுதியதாவது; ''இன்றைய நிலைமை, குறிப்பாக இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பான புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தினை தொகுத்துரைக்கும்படி வேண்டுகின்றது. லெனினின் ஆய்வுகளின் அனுபவங்களில் இருந்து நாம் அநேகவற்றைப் பெறுவது நிச்சயம். ஆனால் லெனின், மூன்றாம் அகிலத்திற்கான தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய வேளையில்தான் காலனித்துவ மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமது தேசியப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சிறப்பாக கீழைத்தேசங்களில் ஏற்பட்ட அநேக மாற்றங்களை மங்கலாக்கும் விதத்தில் விமர்சனமற்ற முறையில் இதனைப் பயன்படுத்த முடியாது. கீழைத்தேச நாடுகளிலும் கூட தேசியவாதம் ஒரு சீரழிவுக்கு உள்ளாகியது.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அரைக்காலனித்துவ முதலாளி வர்க்கத்தின் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதன் அவசியத்தினை பிரகடனம் செய்வதன் மூலம் திருத்தல்வாதம் இச்சீரழிவுக்கு இயைந்து போயிற்று. குறைந்தது 1970களின் ஆரம்பகாலங்களில் இருந்து பண்டா அனைத்துலகக் குழுவின் உள்ளே இப்போக்கின் பேச்சாளராக விளங்கினார். ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் தொழிலாள வர்க்கத்தினை இத் தேசியவாதத்துக்கு கீழ்ப்படிந்து போகச் செய்தமையானது பல சிறிய தேசிய இனங்களை சேர்ந்த ஒடுக்கப்படும் வெகுஜனங்களையும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரித்து வைக்கவும், சுதந்திரத்துக்கான சிறிய தேசிய இனங்களின் தேசிய இயக்கங்களின் அபிவிருத்திக்கும் ஒரு நேரடிப்பாத்திரம் வகித்தது.
முதலாளித்துவ அரசுக்கு எதிராக தேசியவாதத்தின் பதாகையின் கீழ் தொடுக்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்துக்கான போராட்டங்கள் ஒரு திட்டவட்டமான முற்போக்கு உள்ளடக்கத்தினை கொண்டிருந்த போதிலும் தேசியவாதம் தேசிய விடுதலையை அடைவதற்கோ அல்லது ஒடுக்குமுறையாளர்களை துக்கி வீசுவதற்கு அவசியமான சக்திகளை ஐக்கியப்படுத்துவதற்கோ இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. அத்தோடு உண்மையில் தீர்க்கமான கட்டத்தில் ஜனநாயகப் புரட்சியின் சகல சக்திகளுக்கும் தலைமை தாங்க இலாயக்கான ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு தடையாகவும் தோன்றியது.

கீர்த்தியின் வாழ்நாளில் அனைத்துலகக் குழுவின் கடைசிக் கூட்டம் 1987 நவம்பரில் நடைபெற்றதோடு அது தமிழ் தேசிய பிரிவினை முதலாளித்துவ வேலைத்திட்டத்துக்கு எதிராக ஒரு தமிழீழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் முன்னோக்கு அறிக்கையை வெளியிட்டது.

அனைத்துலகவாத முன்னோக்கு

கீர்த்தியின் மரணத்தின் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று யுத்தத்தின் பின்னைய காலப்பகுதிபற்றிய ஒரு ஐந்தொகையை வரையும் வேலையை பூர்த்தி செய்வதும் முதலாளித்துவ தேசியவிடுதலை இயக்கங்களின் முழு அனுபவங்களையும் மதிப்பீடு செய்வதும் அவசியமாகியுள்ளது.

சகல ஒடுக்கப்படும் மக்களதும் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் அதேசமயத்தில் 'தேசிய விடுதலை', 'சுயநிர்ணயம்' பற்றிய சுலோகங்கள் எப்படி நடைமுறையில் முதலாளித்துவத் தேசியவாதிகளால் எதுவிதமான நிஜ ஜனநாயக அல்லது முற்போக்கு சமூக உள்ளடக்கமும் இல்லாத பிரிவினை, இனவாதப் பிற்போக்கு வேலைத்திட்டங்களுக்கான நியாயப்படுத்தல்களுக்காக பரிணாமம் செய்யப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துவது மார்க்சிஸ்டுகளின் கடமையாகும்.
மார்க்சிஸ்டுகள், தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஒரு முற்போக்கு உள்ளடக்கம் கற்பிக்க காரணம் என்னவெனில் அவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்தும் பின்தங்கிய நிலைமை, கோத்திரம், ஜாதி வேறுபாடுகள் ஆகிய மரபுரிமைகளில் இருந்தும் வெற்றிபெறுவதோடு ஏதோவொரு விதத்தில் இனங்காணப்படுவதே. 'இந்தியா'வும் 'சீனா'வும் இனரீதியிலோ அல்லது மொழிரீதியிலோ ஐக்கியப்படுத்தப்பட்ட தேசியங்கள் அல்ல. ஆனால் அவை நிஜ பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்துக்கான சாத்தியங்களை திறப்பதன் மூலம் ஒரு பரந்த பிராந்தியம் பூராவும் மக்களை முற்போக்கான முறையில் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் அரசியல் கருத்துப்பாடுகளாகும்.

'தேசிய விடுதலையின்'' வீரர்களாக இன்று உரிமை கொண்டாடும் எந்தவொரு இயக்கத்தினுள்ளும் அந்த உள்ளடக்கத்தினை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எவ்வாறெனினும் வேறுபட்ட இயக்கங்களின் அகநிலை இலக்குகள் என்னவாக இருந்தபோதிலும் இந்த உலகளாவிய பொருளாதார இணைப்புச் சகாப்தத்திலே புதிய தேசிய அரசுகளை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் மனித இனத்தின் சுதந்திரத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாது. வேறுபட்ட தேசிய, மொழி, மத அல்லது இன அடையாளங்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புப் பிராந்திய அடைப்புக்களை நிர்மாணிப்பதானது யதார்த்தமாகுமிடத்து அது ஒரு காட்டுமிராண்டி தனத்தினுள் தள்ளுவதைக் குறிக்கும்.

இந்தப் பிரச்சனை மீது ட்ரொட்ஸ்கி மிகவும் தெளிவாக வாதிட்டார். அவரது ஜீவிய காலத்தில் கூட சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை இன்னமும் ஒரு முற்போக்கு உள்ளடக்கத்தை கொண்டிருந்த காலத்தில்- இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினை ஸ்தாபிதம் செய்வதற்கு மேலாக நின்றுகொண்டிருக்கவில்லை. சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை அன்றோ அல்லது இன்றோ மார்க்சிசம் தேசியவாதத்துடன் சமரசம் செய்துகொள்வதை குறிக்கவில்லை. உதாரணமாக கட்டலான் சுயநிர்ணய பிரச்சினை மீதான ட்ரொட்ஸ்கியின் ஆக்கங்கள் இந்தவிதத்தில் மிகவும் ஆலோசனைப் பண்பு கொண்டவை.
நான் இந்த விரிவுரையின் அளவினை தெரிவு செய்வதற்கு தலைவர் அவர்கள் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டதுபோல், கீர்த்தியின் பணியின் சிறப்பினை அவரின் புத்திஜீவி, அரசியல் பணிகள் அடிப்படையாகக் கொண்டிருந்த புரட்சிகர அனைத்துலக வாதத்தின் கோட்பாட்டு பாரம்பரியங்களை ஒரு வரலாற்றுரீதியில் மீளாய்வு செய்வதன் அடிப்படையிலேயே சாத்தியமாகும் என நம்பியதேயாகும். இந்தப் பெரிதும் நீண்ட குறிப்பினை ஒரு முடிவுக்கு கொணர என்னை அனுமதியுங்கள்.